பக்கம்:திருவருட்பா-11.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 97.

(வி . ரை. நீர் வளத்தின் மிகுதியை உணர்த்த மாநந்தம் ஆர்வயல் எனப்பட்டது. ‘நீரிடை உறங்கும் சங்கம்’ என்பர் கம்பர். செங்கண்மால் தடக்கையில் சங்கம் நாண முள் தாள் தாமரை முறுக்கவிழ் மலர்மேல் வலம்புரி கிடக்கும் வாதவூர்’ என்பர் சிவப்பிரகாச சுவாமிகள், திருஞானசம்பந்தர் கெளனிய கோத்திரத்தைச் சார்ந்தவர். இதனே அவரே தம் திருகடைக்காப்புச் செய்யுளில் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். கெளனியன் ஞானசம்பந்தன்’ என்பது அவரது வாக்கு களில் ஒன்று. சம்பந்தர் பிறந்த பதி சீர்காழி. இதனையும் அவர், குளிர் காழியுள் ஞானசம்பந்தன்’ என்று கூறுமாற்றா லும் உணரலாம். எனவேதான், நம் ஐயா, கழிக் கவுணியர் மாமணி” என்றனர்.

சீர்காழித்தலம், சீர்காழி இரயில்வே நிலையத்திலிருந்து ஒரு.கல் தொலேவில் உள்ளது. இத்தலத்து இறைவர் குரு, லிங்க, சங்கம வடிவில் முறையே தோனியப்பர், பிரமீசர், சட்டைநாதர் வடிவில் காட்சி அளிக்கின் ருர் தோனியப்பு ரும், சட்டைநாதர் விமானத்தின்மீது உள்ளனர். இறைவியின் பெயர் பெரியநாயகி, திருமலைநாயகி - எனப்படும். திருஞான சம்பந்தர் கோயிலும் தனியே உண்டு. திருஞானசம்பந்தர் பிறந்த வீடு இரட்டைத் தெருவில் உள்ளது. இப்போது இது திருஞானசம்பந்தர் வீதி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இத்தலத்து இறைவிதான் ஆளுடை பிள்ளையாருக்கு ஞானப்பால் தந்தவள். அது முதல் ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் ஆயினர். திருஞான சம்பந்தப் பெருமா லுக்கு இறைவி ஞானப்பால் தந்ததைப் போற்றிப் பாடாத புலவர்கள் இலர். அப்பாடல்களில் பொருள் நயமும் கற்பனை நயமும் கனிந்து தோன்றும். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/107&oldid=681587" இலிருந்து மீள்விக்கப்பட்டது