பக்கம்:திருவருட்பா-11.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}8 திருவருட்டா

(அ - சொ. வீற்று - தனி. ஏறு - இரடபம், இலங்கும்விளங்கும். மாற்று பொன், வெள்ளியின் தரம்.

(இ - கு.) வீற்று - ஒளிர், ஏறு - ஒளில், மாற்று -- ஒளிர் எனப் பிரிக்க,

(வி - ரை.) இறைவியின் நிறம் பச்சை ஆதலின், மரகதமென்கரும்பே’ என்றனர். இறைவியின் ஒளி தனிச் சிறப்புடைமையின் வீற்று ஒளிர் ஞான விளக்கே’’ எனப் பட்டது. ஏற்றுக் குன்றிலே இருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி” என்று பரஞ்சோதியார் கூறுவார் ஆதலின், இறைவர் ஏற்று ஒளிர் ஒற்றி இடத்தர்’ எனப்பட்டார். (41)

ஆசையுள் ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நீன்தாள் பூசையுள் ளகர்னனில் எங்கே உலகச்செய் பூசைகொள்வார் தேகையுள் ளார்ஒற்றி ஊர்உடை யார்இடம் சேர்மயிலே மாசையுள் ளார் புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - கை.) மகத்துவம் உடையவராகிய திருஒற்றி யூர்ப் பரமரின் இடப்பக்கத்தே சேர்ந்து விளங்கும் மயிலே! பொன்னேயும், பொருளையும் மனத்தால் நினைக்காதவர்களால் புகழப்படுகின்ற மானே! வடிவுடை மாணிக்கமே! எட்டுத் திசைகளிலும் உள்ள அட்டதிக்குப் பாலகர்கள், பிரமன், திருமால் முதலான தேவர்களும் மற்றும் பலரும் உன் திருவடிகளைப் பூசித்து உய்யவேண்டும் என்பதை நினைக் காமல் இருப்பார்களானல், அவர்கள் உலகத்தார் போற்றும் பூசைகளே எப்படி ஏற்க முடியும்? (எ . து.)

(அ - சிொ.) தேசு - மகத்துவம், ஒளி, பெருமை. உள்ளார் . பெற்றிருப்பவர். மாசை - டொன். உள்ளார் . தினேக்காதவர். ஆசை - திசை. ஆசை உள்ளார் - எட்டுத் திசையில் இருக்கும் அட்டதிக்குப் பாலகர்கள். அயன் - பிரமன். மால் - திருமால். ஆதி - முதல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/116&oldid=681599" இலிருந்து மீள்விக்கப்பட்டது