பக்கம்:திருவருட்பா-11.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை ! 07

(இ - கு.) அயன்மால், உம்மைத் தொகை.

(வி - ரை.) இறைவன் ஒருவனே பெருமைக்குரியவன் ஆதலின், தேசை உள்ளார் திருஒற்றியூர் உடையார்’ எனப்பட்டார். இறைவியை உலகப் பொருள்களிடத்தில் ஆசையற்றவர்கள் போற்றிப் புகழ்வர் ஆதலின் அவள் ‘மாசை உள்ளார்கள் புகழ் மானே’ எனப்பட்டாள். உண்மை ஞானிகள் ஒடும் பொன்னும் ஒக்கவே நோக்கி வீடும் வேண்டா விறவில் விளங்கி, கூடும் அன்பினில் கும்பிடலே விரும்புவர் ஆதலின் அவர்களே, மோசை உள்ளார்’ என நம் ஐயா குறிப்பிட்டனர்.

எட்டுத் திக்குப் பாலகர்கள் இந்திரன், வருணன், வாயு, அக்கினி, யமன் நிருதி, குபேரன், ஈசானன் என்பவர்கள். இறைவனைத் தேவர்கள் வணங்குவதற்கும் போற்றுவதற்கும் காரணம் தம்மைப் பிறர் போற்றுவதற்கும் வணங்குவதற்கும் ஆகும். இந்த உண்மையினத் திருவாசகம்,

“வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம் நின்யால் தாழ்த்துவதும் தரம்உயர்ந்து தம்மைஎல்லாம்

(தொழவேண்டிச் சூழ்த்துமது கரம்முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்தப்பிறப் பறுத்திடுவான் யானும் உன்னேப் பரவுவனே.” என்று அறிவிக்கிறது. எனவேதான் ‘நின்தாள் பூசை உள்ளார் எனில் எங்கே உலகச் செய்பூசை கொள்வர்’ என்றனர். (42)

அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில் பண்டாரை சூழ்மதி போல்இருப் போர்கள் நின் பத்தர்பதம் கண்டாரைக் கண்டவர் அன்றாே திருஒற்றிக் கண்துதல்சேர்

வண்டாரை வேல் அன்ன மானே வடிவுடை மாணிக்கமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/117&oldid=681600" இலிருந்து மீள்விக்கப்பட்டது