பக்கம்:திருவருட்பா-11.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 திருவருட்யா

(வி ரை. தென் என்பதற்குத் தெற்குத் திசை என்று பொருள் கூறினும் கூறலாம். இறைவி இறைவனது உடலில் சரிபாதியாக அமைந்திருத்தலின் செம்பால் என்றார். கடல் சிற்சில சமயங்களில் தன் நீர்மையில் குறைதலும் உண்டு. அதாவது மேகம் தன்னிடத்தில் மழையினேப் பெய்யாத, போது கடல் தன் நீர்மை குன்றும். இந்த உண்மையினத். திருக்குறள்,

  • நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான் நல்கா தாகி விடின் ‘

என்று கூறுதல் காண்க. ஆணுல் இறைவியாகிய கருணைக் கடல் என்றும் கருனேயினின்று குறைதல் இல்லை. ஆதலின் வடியாக் கருனேக்கடலே’ என்றனர்.

திருமால், பிரமன் முதலான தேவர்கள் இறை வியின் திருவடிகளே வணங்கும்போது அத்திருவடிகளின் சிறு துரசு அவர்களின் தலைகளில் பொருந்தப் பெறும். அத்துTசினை அவர்கள் தம் தம் சிரசில் தாங்குவதால்தான் அவர்கள் பிறர் தம் பாதங்களே வந்து வந்து வணங்கும் பெருமையினம் பெற்றனர். இந்த அரிய கருத்தையே நம் ஐயா இப்பாட்டில் அமைத்துள்ளனர். இறைவியைத் திருமாலும், பிரமனும் வணங்குவர் என்பதை அபிராமி அந்தாதி நாரணனும் அயனும் பரவும் அபிராமவல்லி’ என்று குறிப்பிடுதல் காண்க. இறைவியைத் தொழுவதனுல் எய்தும் பயனே,

  • விரவும் புதுமலர் இட்டுநின் பாத விரைக்கமலம்

இரவும் பகலும் இறைஞ்சவல் லார் இமை யோர்எவரும் பரவும் பதமும் அயிர வதமும் பகீரதியும் உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே ’’

என்று அபிராமி அந்தாதி கூறுதல் காண்க. (44)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/120&oldid=681604" இலிருந்து மீள்விக்கப்பட்டது