பக்கம்:திருவருட்பா-11.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல 1 if

ஒவா தயன்முத லோர்முடி கோடி உறழ்ந்து படில் ஆவா அனிச்சம் பொருமலர்ச் சிற்றடி ஆற்றும்கொலோ காவாய் இமயப்பொன் பாவாய் அருள் ஒற்றிக் காமர்வல்லி வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) இமய மலையில் தோன்றிய அழகிய பெண்ணே! அருள் நிறைந்த ஒளி பொருந்திய திருஒற்றியூரில் வாழ்கின்ற அழகிய வல்லிக்கொடி போன்றவளே! வடிவுடை மாணிக்கமே! எங்களைக் காப்பாயாக! எங்கள் அருகே வருவாயாக’ என்று அன்புடன் விண்ணப்பித்துக்கொள்ளும் அன்பர்களின் வாழ்வே! இடைவிடாமல் பிரமன் முதலான தேவர்களின் தலையில் அணிந்துள்ள பல முடிகள் பெருகிப் படிந்தால் ஆ! ஆ! அனிச்சம் மலர் படினும் தாங்க முடியாத, அவ்வளவு மென்மை வாய்ந்த உன் சிறிய திருவடிகள் பொறுத்துக்கொண்டு இருக்குமோ ?” (எ . து.)

(அ - சொ.) பொன் - அழகு. பாவாய் - பெண்ணே. காமர் . அழகிய, வல்லி - வல்லிக்கொடி. ஒவாது - இடை விடாமல், அயன் - பிரமன், உறழ்ந்து பெருகி. பொரு . தாங்க முடியாத ஆற்றுங்கொலோ - பொறுக்குமோ.

(இ - கு. பாவை, உவம ஆகுபெயர். காமர், உரிச் சொல். ஆ ஆ எனப்பிரிக்க. இவை வியப்பிடைச் சொற். கள். பொரு, ஈறுகெட்ட எதிர்மறைப் பெயர் எச்சம் சிறுமை-டி அடி எனப்பிரிக்க, கொல் விளுப்பொருளில் வந்த இடைச் சொல். ஓ, அசைச்சொல், வாவா, அடுக்குத் தொடர்.

(வி ரை.) பர்வதராசன் மகளாய் இமயமலையில் தோன்றினமையின் இயைப்பொன் பாவை ஆயினுள். பாவை என்பது பதுமை (பொம்மை) ஆகும். தேவி பதுமை போல அழகுடன் விளங்குதலின் பாவை எனப்பட்டாள். அயன் முதலோர், முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறரும் ஆவர். இறைவியை யார் யார் வணங்குகின்றனர் என்பதை அபிராமி அந்தாதி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/121&oldid=681605" இலிருந்து மீள்விக்கப்பட்டது