பக்கம்:திருவருட்பா-11.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே

(பொ. - ரை.) அடர்ந்து கட்டாக அமைந்துள்ள சடை முடியுடைய திருஒற்றியூரில் உள்ள எம் தியாகராசப் பெருமானின் உள்ளத்தில் அமர்ந்திருக்கின்ற தேன் நிறைந்த மலரை அணிந்துள்ள கூந்தலையுடைய மானே! வடிவுடை மாணிக்கமே நுணுக்கமான கருத்துகள் நிறைந் திருக்கின்ற வேதங்களுக்கும், உபநிடதங்களுக்கும் இன்னமும் கூடச் சிறிதும் எட்டாதிருக்கின்ற உன் திருவடி மலர்கள் ஏழையாகிய என் தலைக்கு எட்டுமா ?” (எ . து.)

(அ - சொ.) ஆர் . பொருந்திய, மட்டு - தேன். குழல் - கூந்தல். மடமான் - இளைய தேவி, இட்டு - நுண்மையான கருத்துகள். மறை - வேதம். பொன் - அழகிய போது - மலர். எளியேன் - ஏழை. எட்டுங் கொலோ - கிட்டுமா ?

(இ - கு.) எம்பெருமான், என்பது எம்மான் என மருவியது. நெஞ்சு + அம், இதில் உள்ள அம் சாரியை. திருவடி போதாக (மலராக) உருவகம் செய்யப்பட்டது. கொல், என்பது வினுப்பொருளில் வந்துள்ள இடைச்சொல். ஒ, ஈற்றசை. சிலர் கொல் என்பதை அசையாகக் கொண்டு, ஒ வினை விளுவாகக் கூறுவர்.

(வி . ரை.) இறைவன் சடைமுடி அடர்த்தியாக இருத் தலின் அதனேக் கட்டார் சடைமுடி ‘ என்றனர். இறைவி இறைவன் உள்ளத்தை விட்டு நீங்காது இருத்தலின் * எம்மான் நெஞ்சத்தமர்ந்த ’’ எனப்பட்டாள். ஒருவன் திருவுள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே ‘ என்பர் குமரகுருபரர்.

வடமொழி வேதம் இரு பிரிவுடையது. அவையே கரும காண்டம், ஞான காண்டம் என்பன. இவ்விரு பிரிவுகளே அன்றி உபாசளு காண்டம் என்னும் ஒரு பிரிவு உண்டு என்றும் கூறுவர். கரும காண்டத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/125&oldid=681609" இலிருந்து மீள்விக்கப்பட்டது