பக்கம்:திருவருட்பா-11.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 1 : 3

தம்மை அடியார்க்கு எளியன் என்று குறித்துள்ளனர். அத் திருமுகம் (கடிதம்}

‘ அடியார்க் கெளியன்சிற் றம்பலவன் கொற்றம்

குடியார்க் கெழுதியகைச் சீட்டு-படியின்மிசைப் பெத்தான்சாம் பானுக்குப் பேதம் அறத் தீக்கை செய்து முத்தி கொடுக்க முறை ‘ என்பது. இந்த வரலாற்றின் குறிப்பையே நம் ஐயா உளத்தில் கொண்டு ‘எளியார்க்கு எளியர் திருஒற்றியார்’ என்றனர்.

இறைவி பரிமளமே வடிவாய் அமைந்தவள் என்னும் குறிப்பைக் குமரகுருபரர், பரிமளம் ஊறிய உச்சி’ என்று கூறுதலால் தெளியலாம். இதனை மேலும் வற்புறுத்தும் முறையில் அபிராமி அந்தாதி,

  • சொல்லும் பொருளும் என நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடி யேநின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க் கே அழி யா அரசும் செல்லும் தவநெறி யும்.சிவ லோகமும் சித்திக்குமே “ என்று கூறுகின்றது. எனவேதான் நம் ஐயா ‘பரிமளியr நின்று ஓங்கும் மருவே” என்றனர். இறைவி பரையாக மட்டும் இன்றிப் பராபரையாகவும் உள்ளாள் என்பதை அபிராமி அந்தாதி ஒரு பாகம் கொண்டாளும் பரா பரையோ’’ என்று கூறுவதால் உணரலாம். (47)

வினங்காதல்அன்பர்தம் அன்பிற்கும் நீன்புல விக்கும் அன்றி வனங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும் நீன் குணங்கா தலித்துமெய்க் கூறுதந் தான்எனக் கூறுவர் உன் மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) வடிவுடை மாணிக்கமே ! உள்ளத்தில் உயர்வும் அழகும் கொண்ட மெய்யன்பர்களின் அன்பிற்கும், கீ கொள்ளும் ஊடலுக்கும் அல்லாமல் வேறு எந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/129&oldid=681613" இலிருந்து மீள்விக்கப்பட்டது