பக்கம்:திருவருட்பா-11.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 4. திருவருட்பா

முழுமணி மிடற்றன் கனல் மழு வீரன்

முக்கண் ஆண் தகைநி ைதெழில்கூர்

முகம் புலர் தலைக்கண் டுடல்வளே ந் தடியின்

முன்னப்பிறைக் கோடுகொண் டுழுது

விழுமணி அரவம் நுழைசடா டவியின்

விண் நதித் தண்புனல் விடுப்பு

விரைவொடு குளிர்ந்து முக மலர் தலினுல் மென்கொடி என நினை உணர்ந்தேன். ‘

என்று பெரியநாயகி அம்மை விருத்தம் பாடிக் களிக்கும்.

‘இகல்மலிந்தபுய இறைவர் தஞ்சமுற இருகை கொண்டு தழுவாரணி ‘ என்று மங்களாம்பிகை பிள்ளேத் தமிழ் பாடுகிறது. அபிராமி அந்தாதி,

  • ஆனந்த மாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வானந்த மான வடிவுடை யாள் மறை நான்கினிக்கும் தானந்த மான சரணுர விந்தம் தவளநிறக் கானந்த மாடரங் காம்னம்பி ரான்முடிக் கண்ணியதே’

என்று பாடிக் களிக்கிறது.

இறைவி ஊடல் கொள்ளுதற்குக் காரணம் கங்கள் தேவியினிடம் இறைவர் காதல் கொண்டுள்ளார் என்பதனுல் எள்பதையும் குமரகுருபரர்,

‘ கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளே

செங்குவளே பூத்தாள் செயல்என்னே-எங்கோமான்

பங்குற்றும் தீரா பசப்பு ‘

என்பர். இறைவர் இறைவியின் ஊடலைத் தீர்க்க வணங்கிய போது, இறைவி, இறைவன் வணங்குவதற்காகவோ, தன் நெற்றிப் பகையான பிறைச்சந்திரன் வணங்குவதற்காகவோ, தன் அல்குல் பகையாம் பாம்பு வணங்குவதற்காகவோ மகிழாமல் தன் சககளத்தியாகிய கங்கையும் வணங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/134&oldid=681621" இலிருந்து மீள்விக்கப்பட்டது