பக்கம்:திருவருட்பா-11.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 3.2 திருவருட்பா

புலையாம் பிறவி பிறந்தென்செய் தோம்பொன்னி

பொன்கொழிக்கும் அலேயார் திருவரங் கத்தெம்பி ரான்நம

தன்னேயொடும் தொலேயாத கானம் கடந்த அந் நாள் தடம்

தோறும் புல்லாய்ச்

சிலேயாய்க் கிடந்தி லமேநெஞ் சமேகழல்

தீண்டுகைக்கே ‘

என்று கனிவுடன் பாடியுள்ளனர். இந்த நிகழ்ச்சிகளேயே நம் வள்ளலார், ‘வனம் கடந்தோன்’ என்றனர். வனம் கடந்தோன் இராமன். அவன் திருமாலின் அவதாரம் ; திருமால் இறைவியைத் தொழுதே எல்லாப் பேற்றையும் பெற்றுள்ளான். ஆதலின் ‘வனம் கடந்தான் புகழ் மானே’’ எனப்பட்டாள். (5 0)

இல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல் எல்லாரும் நின்செயல் அல்லா தனுவும் இயக்கிலரேல் இல்லாமை யால் உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய் மல்லர் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.

(ஜோ , ரை, வளப்பம் பொருந்திய வயல்கள் நிறைந்த திருஒற்றியூரில் எழுத்தருளியுள்ள இறைவியே! வடிவுடை மாணிக்கமே வன்மையுடையவர்களும், வன்மை அற்றவர் களும், மற்றுமுள்ள மனிதர்கள் முதலான ஏனேயவர்களும் உன் திருவருளாம் செயல் இன்றி ஒர் அணுவையும் அசைக்க ஒண்ணு நிலேயினராய் இருப்பார்களாகுல், உன் திருவருள் இல்லாமல் திரிகின்ற அற்பணுகிய நான் செய்கின்ற குற்றங்கள் எவை என்று கூற முடியும் (எ . து.)

(அ - செ.) இயக்கிலர் - அசைத்திலர். புல்லேன் - அற்பன். மல் - வளப்பம். ஆர் - பொருந்திய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/142&oldid=681630" இலிருந்து மீள்விக்கப்பட்டது