பக்கம்:திருவருட்பா-11.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 திருவருட்பா

இளைய முருகப் பெருமான், சேய் - குழந்தை (முருகன்) தனம் - செல்வம், கொங்கை, அகம் - மனம். இருள்பால். இருளின் பல்வேறு பகுதிகள். மருள் - மயக்கம்.

(இ - கு.) தெருள்பால், தனத்தனம் பண்புத் தொகை கள், எந்தை, மரூஉ வழக்கு.

(வி - ரை.) விநாயகப் பெருமான் ஐந்து கரங்களே உடையவர். அவையே நான்கு கரங்களும் துதிக்கையாகிய மற்றும் ஒரு கரமும் ஆகும். இந்தக் கரங்களைக் கொண்டு என்ன செய்வது என்று திகைக்காமல் கொழுக்கட்டையை ஏந்திய கையைத் தமக்கும், தந்தத்தைப் பிடித்திருக்கும் கையைத் தேவர்களுக்கும், இரத்தினக் குடத்தை ஏந்திய கையைப் பெற்றாேள்களுக்கும், இரண்டு கரங்களே மெய்யன் பர் களுக்கும் பயன்படுத்தும் தெளிவைப் பெற்றிருக்கின் ருர், ஆதலின், “தெருள்பால் உறும் ஐங்கைச் செல்வர்’ என்று தம் ஐயா விநாயகரைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஐந்து கைகளைக்கொண்டிருக்கும் காரணத்தைத் தணிகைபுராணம்,

‘பண்ணியம் ஏந்தும் கரம் தனக் காக்கிப் பால் நிலா மருப்பமர் திருக்கை விண்ணவர்க் காக்கி அரதனக் கலச

வியன்கரம் தந்தைதாய்க் காக்கிக் கண்ணில்ஆ வைவெங் கரிபிணித் தடக்கிக்

கரிசினேற் கிருகையும் ஆக்கும் அண்ணலேத் தணிகை வரை வளர் ஆபச் சகாயனே அகம்தழிஇக் களிப்பாம்”

என்று கூறுகிறது.

இறைவி முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்தலும்,

விநாயகப் பெருமானத் தழுவி மகிழ்தலும் அவள் இவ் விருவர் மாட்டும் கொண்டுள்ள அருளேக் காட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/146&oldid=681634" இலிருந்து மீள்விக்கப்பட்டது