பக்கம்:திருவருட்பா-11.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

3.

வடிவுடை மாணிக்கமாலே #

(இ . கு.) நின்பால், என்பதன் பால் ஏழின் உருபு. -கை அகம், என்பதன் அகமும் ஏழன் உருபு.

(வி - ரை.) திருஒற்றியூர்க் கடற்கரை ஊராக இருப்பினும் நன்செய் நிலங்களுக்கும் இடம் ஆதலின் செய் அகம் ஓங்கும் திருஒற்றியூர் ‘ என்று சிறப்பிக்கப்பட்டது. இறைவி மெய் அன்பர்கட்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கு தலின், ‘அன்பு மேவுகின் ருேர் கை அகம் ஒங்கும் கனியே’ எனப்பட்டனள். இறைவி பிறவி எனும் நோயை ஒழிக்கும் மருந்தாய் இருத்தலின் ‘வையகம் ஓங்கும் மருத்தே’ எனப் பட்டாள். (55)

தரும்பேர் அருள் ஒற்றி ஊர்உடை யான்இடம் சார்ந்தபசுங் கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே இரும்பேய் மனத்தினர் பால்இசை பாத இளங்கிளியே வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) அன்பர்கட்குப் பேரருளே அளிக்கின்ற திருஒற்றியூரை இடமாகக் கொண்டுள்ள படம் பக்கநாதனது இடப்பக்கத்தே அமர்ந்துள்ள இளங்கரும் பே! இனிய கற் கண்டே இனிமை நிறைந்த பழத்தின் தேனே! பெரிய பேய் போல அலையும் உள்ளம் கொண்டவர்களிடம் ப்ொருந்த மனம் கொள்ளாத இளைய கிளியே: உலகில் நிலவும் பேரொளி யுடைய சுடரே வடிவுடை மாணிக்கமே ‘ (எ . து.)

(அ - சொ.) மதுரம் - இனிமை. நறவு - தேன். இரும் பேய் - பெரியபேய், இசையாத - பொருந்த விரும்பாத,

(இ - கு.) இருமை + பேய் எனப் பிரிக்க. பால், ஏழின் உருபு.

(வி - ரை.) இறைவி தன்னே நினைப்பவர்களுக்குப் பெருஞ்சுவையினளாய் இருத்தலின் கரும்பே, கற்கண்டே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/149&oldid=681637" இலிருந்து மீள்விக்கப்பட்டது