பக்கம்:திருவருட்பா-11.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 42 திருவருட்பா

வெம்மை + பாலே. வம்பு + ஆல் எனப் பிரிக்க. செம்பால் கலந்த, ஏ முன் தொகை. பைந்தேன், பண்புத் தொகை பாலே நெஞ்சர். மலர்ப்பதம், உவமத் தொகை. பதம், குறுக்கல் விகாரம், வாம்பு + ஆல், ஆல் மூன்றன் உருபு. (வி ரை.) பாலே என்பது ஐவகை நிலங்களுள் ஒன்று. ஐவகை நிலங்கள் ஆவன; குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலே என்பன. மலேயும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி; க: டும் காட்டைச் சார்ந்த இடம் முல்லை; வயலும் வயலைச் சார்ந்த இடம் மருதம், கடலும், கடலேச் சார்ந்த இடம் நெய்தல்; குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும், வெம்மை காரண மாகக் வளத்தில் குறைந்து காணப் பட்டால் அந்த இடம் பாலே எனப்படும். இந்த உண்மையினே,

முல்லேயும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்இயல் பழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலே என்பதோன் படிவம் கொள்ளும் “ எனச் சிலப்பதிகாரம் கூறுவது கொண்டு தெளியலாம். இந்தப் பால நடுவு நிலத்தினே என்றும் கூறப்படும். இந்த நிலத்தின் வெம்மையை உணர்த்துவதற்காகவே இதற்கு வேனில் காலமும், நண் பகல் வேளையும் பெரும் பொழுதாக வும், சிறுபொழுதாகவும் முறையே கூறப்பட்டன.

நடுவுநிலத் தினேயே நண்பகல் வேனிலொடு முடிவுநில மருங்கின் முன்னிய நெறித்தே ’’ என்பது தொல்காப்பியம்.

பாலே வனத்தில் வாழும் மக்கள், எவரேனும் தப்பித்தவறி அந்நிலத்தில் வருவாராயின் அவர்களிடம் இருக்கும் பொருளைப் பறிக்க வரும்போது, வந்தவர்கள் தம்மிடம் ஒரு காசும் இல்லை என்றாலும், அவர்களேச் சும்மா விடாமல் அவர் களைக் கருவியால் குத்தி அவர்கள் துள்ளுவதைக் கண்டு மகிழ்வார்களாம். அதனுல் பறவைகளும் அந்நிலத்தே பறவாவாம். இதனேக் கலித்தொகை என்னும் சங்க நூல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/152&oldid=681641" இலிருந்து மீள்விக்கப்பட்டது