பக்கம்:திருவருட்பா-11.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமா8ல # 43

  • கடுங்கண் மறவர்தாம் கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம் பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வெளவலின் புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர்.இடை ’’

என்று அப்பாலேயின் கொடுமையைக் கூறுகிறது. மேலும் அவர்கள், வழிபறிசெய்து பொருள் பறித்த பிறகும் அன்பும் அருளும் அன்றி வழிப்போக்கற்கு, துன்பமே செய்வர். இதனையும் கலித்தொகை,

  • பொருள்கொண்டு புண் செயின் அல்லதை அன்போ

டருள்புறம் மாறிய ஆரிடை அத்தம் ‘

என்கிறது.

கலிங்கத்துப்பரணி ஒன்பது ஒரு நூல். அது பாலையின் கொடுமையைக் கூறும்போது,

  • தீயின் வாயின் நீர் பெறினும் உண்பதோர்

சிந்தை கூரவாய் வெந்து லர்த்துசெந் நாயின் வாயில் நீர் தன் இனநீர் என

நவ்வி நாவினுல் நக்கி விக்குமே

இந்தி லத்துளோர் ஏகல் ஆவதற்

கெளிய கானமோ அரிய வானுளோர் அந்நி லத்தின் மேல் வெம்மை யைக்குறித் தல்லவோ நிலத்தடி இடாததே

காடுஇதனேக் கடத்தும் எனக் கருமுகிலும் வெண்மதியும் கடக்க அப்பால் ஒடிஇளேத்துஉடல் வியர்த்த வியர்வன்றாே.

உகுபுனலும் பனியும் அம்மா ‘ என்று கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/153&oldid=681642" இலிருந்து மீள்விக்கப்பட்டது