பக்கம்:திருவருட்பா-11.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 55

குப் பற்றி என்க. இல்லை. குறிப்பு வினைமுற்று. கண்டாய், முன்னிலே அசைச்சொல்.

(வி - ரை. மன் என்பதற்குப் பெருமை எனப் பொருள் கொண்டு பெருமை உயர்ந்து இருக்கும் திருஒற்றியூர் என்று பொருள் காணினும் காணலாம். அப்படிப் பொருள் கானும் போது, போல் என்பது உவம உருபாக நிற்காமல் அசைச் சொல்லாகிவிடும். இப்பாடலில் நம் ஐயா, சிவ வர்க்கத்தின் இழிவையும், சிற்சத்தியின் உயர்வையும் எடுத்துக் காட்டி இருப்பதைச் சிந்தித்தல் வேண்டும். (66)

துன்பே மிகும்இல் அடியேன் மனத்தில்தின் துய்ய அருள் இன்பே மிகுவதெந் நாளே எழில் ஒற்றி எந்தைஉயிர்க் கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால் வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) அழகிய திருஒற்றியூரில் வீற்றிருக்கும் எம் தந்தையாம் இறைவரது உயிர்க்கு அன்பாய் விளங்கு பவளே! தொண்டர்களின் அறிவாய் இருப்பவளே! சைவ நெறியில் அன்பற்றவர்களிடம் கொடியவளாய் இருப்பவளே! உண்மை அறிவாய் விளங்குபவளே! வடிவுடை மாணிக்கமே! துன்பமே மிதியாகக் கொண்டுள்ள இந்த அடிமையினது உள்ளத்தில் உன் தூய்மையான திருவருள் இன்பம் பெருகு வது எந்த நாளோ? தெரியவில்லையே! (எ . து.)

(அ - சென். எழில் - அழகு, எந்தை - எம் தந்தை, துய்ய சுத்தமான,

(இ - கு.) எந்தை, என் தந்தை என்பதன் மருவி.

11 ல், ஏழன் உருபு. துன்பே, இன்பே என்பனவற்றின் ஏகா ாங்கள் தேற்றம், துய்ய, குறிப்புப் பெயர் எச்சம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/165&oldid=681655" இலிருந்து மீள்விக்கப்பட்டது