பக்கம்:திருவருட்பா-11.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 திருவருட்பா

(பொ. - ரை.) சொற்களில் தேர்ந்த நல் அறிஞர்கள் புகழ்கின்ற திருஒற்றியூரில் எழுந்தருளி யிருக்கும் பெருமை யில் சிறந்தவர் ஆகிய உன் கணவர் தமது தேர்ந்த திருத் தோளில் அணைக்கின்ற மானே! வடிவுடை மாணிக்கமே! என் உள்ளத்தில் நிறைந்த துன்பம் சிறிதளவாகிலும் நீங்கவும் உன் அழகிய தேன் நிறைந்த மலர் போன்ற திருவடிகளேத் துதிக்கவும் நீ உன் திருவுள்ளத்தில் எண்ணங்கொண்டு அருள் செய்வாயாக!’ எ . து..}

(அ - செ.) செம்மல் - பெருமையில் சிறந்தவர். தே . தேன். புரிதி - அருள் செய்வாயாக.

(இ - கு.) சொல், கருவி ஆகுபெயர். செம்மல் + தேர்; பொன் + தேன்-லைச் எனப் பிரிக்க. மலர்ப்பதம், உவமத் தொகை. பதம், குறுக்கல் விகாரம், கண்டாய், முன்னிலை அசைச் சொல். புரிதி, வியங்கோள் வினேமுற்று. (வி - துை.) சொல் ஈண்டுக் கருவி ஆகு பெயராகி இலக்கண இலக்கியங்களே உணர்த்தி நிற்கிறது. தேர் புயம் என்பதன் கருத்து, தோளின் வன்மையினே குறித்தற்கு ஆகும், இங்குச் சொல்தேச் அறிஞர் என்று நம் ஐயா குறிப்பிட்டிருப்பவர்கள் மூவர் முதலிகளான அப்பர், சம்பந்தர், சுந்தரர், பட்டினத்துப் பிள்ளே ஆவார். ஏனெனில் இவர்கள் திருஒற்றியூரைப் புகழ்ந்து பாடி யுள்ளனர். சம்பந்தர் இத் தலத்தைப் பற்றி ஒரு பதிகமும், அப்பச் ஐந்து பதிகங்களே யும், சுந்தரர் இரண்டு பதிகங்களேயும் பாடியுள்ளனர்.

திருஞானசம்பந்தர் மாலே மாற்று, திருஎழுக்கூற் றிருக்கை, ஏகபாதம், திருவியமகம் முதலான பல கவிவகை களைப் பாடியுள்ளனர். அப்பர் திருக்குறுத் தொகையாம் கலி விருத்தத்தையும், திருவிருத்தமாம் கட்டளேக் கலித் துறையினையும், திருநேரிசையினேயும், திருத்தாண்டகங்களே பும் பாடியுள்ளன்ர். சுந்தரரின் இலக்கண இலக்கியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/170&oldid=681661" இலிருந்து மீள்விக்கப்பட்டது