பக்கம்:திருவருட்பா-11.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமrலே f 63

மயிலே! வடிவுடை மாணிக்கமே! மற்றவர்கள் எல்லாம் மகிழ்வுடன் இருக்க ஐயோ! தன்னந் தணியளுகிய நான் மட்டும் துயரால் வாடி வதங்குவது உன் திருவருட்கு அழகாகுமா?” (எ . து.)

(அ - செ.) தோடம் - குற்றம். திரு . அழகிய, நான்முகன் - பிரமன். மால் - திருமால். சஞ்சலம் துயரம். தமியேன் - தனியணுகிய நான்.

(இ . கு. நங்காய், என்பது விகுதிபெருத பெண்பால் சிறப்புப் பெயர். நான் முகன், மால், உம்மைத் தொகை. நான்கு-முகன் எனப்பிரிக்க. சந்தோடமாக என்பது சந்தோடமா என நின்றது தொகுத்தல் விகாரம் பற்றி என்க. அந்தோ, இரக்கக் குறிப்பைக் காட்டும் ஒர் இடைச்சொல். வாடல், தொழிற்பெயர்.

(வி - ரை.) இறைவி திருமால், பிரமன் முதலான தேவர்களால் போற்றப்படுதலேயும் அவர்கட்கு அவள் திருவருள் பாலித்ததையும் முன் பாடல்களில் விளக்கப் பட்டன. ஆண்டுக் காண்க:

‘கடலே அனேய ஆனந்தம் கண்டார்

எல்லாம் கவர்ந்துண்ண இடரே பெருக்கி ஏசற்றங் கிருத்தல்

அழகோ அடிநாயேன் உடையாய் நீயே அருளுதி என் றுணர்த்தா

தொழிந்தே கழிந்தொழிந்தேன் சுடரார் அருளால் இருள் நீங்கச் சோதி

இனித்தான் துணியாயே ’

என்று மணிமொழியார் கருத்தின் ஒட்டி நம் வள்ளலார் இப் பாட்டைப் பாடியுள்ளார். (69)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/173&oldid=681664" இலிருந்து மீள்விக்கப்பட்டது