பக்கம்:திருவருட்பா-11.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 திருவருட்பா

“கானத் தலைவன் தன்மை எய்து துணித்திடும் துணித்த விடக்கினே விறகினில் கடைந்த வெங்கனல் காய்ச்சி தறுவிய இறைச்சி நல்லது சுவைகண்டு அண்ணற் கமிழ்தென் றதுவே நைமித்துத் தண்ணறும் கனே நீர் தன் வாய்க் குடத்தால் மஞ்சனம் ஆக முகந்து மலர் எனக் குஞ்சியில் துவர்க்குலே சொருகி, திருக்க ளத்தி எய்திய சிவற்கு வழிபட, பூசனே தன்சீனப் புக்கொரு காலில் தொடுசெருப் படியால் நீக்கி வாயில் இடுபுனல் மேனியில் ஆட்டித் தன் தலைத் தங்கிய துவர்ப்பூ ஏற்றி இறைச்சியில் பெரிதும் போன கம் படைத்துப் பிரானேக் கண்டு கண் டுள்ளம் கசிந்து காதலில் கொண்டதோர் கூத்துமுன் ஆடிக் குரைகழல் அன்பொடு இறுக இறைஞ்சி’

என்று தம் திருக்கண்ணப்ப தேவன் திருமதித்தில் புகழ்ந்து போற்றியுள்ளனர். இவரைப் போலவே கல்லாடஞரும்,

‘கணேயில் வீழ்த்துக் கருமா அறுத்துக் கோலின் ஏற்றிக் கொழுந்திக் காய்ச்சி நாவில் வைத்த நாட்போ னகமும் தன் தலைச் செருகிய தண் பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சன நீரும் கொண்டு’

வழிப்பட்டு ஏத்தினர் என்று தாம் பாடிய திருக்கண்ணப்புகி. திருமறத்தில் போற்றியுள்ளனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/176&oldid=681667" இலிருந்து மீள்விக்கப்பட்டது