பக்கம்:திருவருட்பா-11.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருவருட்பா

திருக்காளத்தி தலம் பஞ்சபூத தலங்களுள் ஒன்று. இறைவர் இங்குக் காற்று வடிவாய் இருக்கின் ருர். இந்த உண்மையினே இத்தலத்து மூலட்டானத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனிக்கு அருகில் ஒரு விளக்குமட்டும் எந்த நேரமும் அசைந்துகொண்டு இருப்பதளுல் உணரலாம். இத்தலம் தென் கயிலாயம் என்று கூறப்படுகிறது. இது சீபுரம் என்றும், மும்முடிச் சோழபுரம் என்றும் கூறப்படும். இதன் விராட் புருடனது ஆருதாரத் தலங்களில் விசுத்தித் தலமாகும் என்றும் கூறுவர்.

இத்தலம் ரேணுகுண்டா கூடுர் இரயில் வழியில் இடையில் காளாஸ்திரி என்னும் பெயரில் ஒர் இரயில் நிலையமாக இருக்கிறது. இங்கிருந்து இரண்டுகல் நடந்தால் இத் தலத்தை அடையலாம். பேருந்தி (பஸ்) வண்டிகளின் மூலமும் நேரே இத்தலத்தை அடையலாம்.

சிலத்தி (சி) பாம்பு (காளம்) யான (அத்தி) ஆகிய மூன்றும் இத்தலத்துப் பெருமானப் பூசித்துப் பேறு பெற்ற மையின் இத்தலம் சீகாளத் தி என்னும் பெயரைப் பெற்றது. இந்த மூன்றன் வடிவங்களும் சிவலிங்கத் திருமேனியில் விளங்குவதை இன்றும் காணலாம். இத்தலத்துச் சிவலிங்கம் சுயம்பு மூர்த்தம். இதன் நிறம் வெண்மை. இம்மூர்த்திக்குப் பச்சைக் கற்பூரம் கலந்த நீர்மட்டும்தான் திருமுழுக்குக்கு (அபிடேகத்திற்கு) உரியது.

இத்தலத்துப் பெருமானத் திருமால், பிரமன், இலக்குமி, சரசுவதி, உரோமேசர், வசிட்டர், தேவ இருடிகள், ஆதி சேடன், யட்சர், அகத்தியர், திக்பாலகர், யோகினிகள். முசுகுந்தன், இருகன்னியர், கண்ணப்பர், நக்கீரர், சிவகோ சரியார், சங்கம வேந்தன் முதலியோர் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர். இங்குப் பொன் முகலி என்னும் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது. இவ்வாறு வடக்கு நோக்கிப் பாய்கிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/178&oldid=681669" இலிருந்து மீள்விக்கப்பட்டது