பக்கம்:திருவருட்பா-11.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 70 - திருவருட்பா

களிக்கலாம். மலையின் உச்சியில் ஒரு சிவ இலிங்கமும் உளது. இந்த இலிங்கத்தைத்தான் கண்ணப்பர் வழிபட்டார் என்று கூறுவர். மேலே அடர்ந்த காடும் ஒரு குளமும் உள்ளன.

இத்தலத்து இறைவியின் திருப்பெயர் ஞானப் பூங்கோதை என்பது. இப் பெயரை நம் அப்பர் பெருமா அரும், ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்” என்று தம் திருத்தாண்டகத்தில் குறித்துள்ளார். இவ்வம்மையார்க்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பொன்கவசம் சாத்தப் படும். அக்காட்சி கண்டு இன்புறுதற்கு உரியதாகும்.

இத்தலத்துக்கு கல்லாலமரமும், (விழுது இறங்காத ஆலமரம்) வில்வ மரமும் தல விருட்சங்கள் ஆகும். விநாயகர் ஐஞ்சந்தி விநாயகர். இத்தலத்துத் தீர்த்தங்கள் பொன்முகலி ஆறு, சூர்ய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்பன.

இத்தலத்துச் சிவபெருமான் காளத்தீசுவரர், குடுமித் தேவர் என்று அழைக்கப்படுவார். காளத்தீசுவரர் என்னும் பெயர்க்குரிய காரணம் முன்பே கூறப்பட்டது, குடுமித் தேவர் என்பதற்குரிய காரணம் இறைவர் மலையின் - (குடுமி - மலை உச்சி) இருப்பதல்ை ஆகும். இதற்கு மற்றும் ஒரு காரணமும் கர்ணபரம்பரையாக (செவிவழியாக)க் கூறப்படுகிறது.

அரசன் தினந்தோறும் காளத்தியப்பருக்கு மலர் மாலையிக்ன அனுப்பி அதனைப் பெருமானுக்குச் சாத்தி அடுத்த நாள் அனுப்பிவைக்கும்படி ஏற்பாடு செய்திருந் தான். அம்மாலையி:ன அரசி தன் கூந்தலில் சூடி மகிழ் வாள். ஆணுல், கோவில் அர்ச்சகர் அதனைத் தன் காதற் கிழத்தி சூட அளித்து அடுத்தநாள் அதனே அரசனுக்கு அனுப்பிவைப்பது வழக்கம். ஒருநாள் அம்மாலையில் ஒரு மயிர் இருக்கக்கண்ட அரசன், அருச்சகரை அழைத்துக் காரணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/180&oldid=681672" இலிருந்து மீள்விக்கப்பட்டது