பக்கம்:திருவருட்பா-11.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 173

ருென்று சிகாளத்திப் புராணம் என்பது. இதனேக் கருணேப் பிரகாசர். சிவப்பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவர் களும் பாடியுள்ளனர். இந்நூலில் சிவப்பிரகாசர் பாடியுள்ள நக்கீரர் சருக்கமும், திருக்கண்ணப்பர் சருக்கமும் சிறந்த பகுதிகளாகும்.

சேனக் கவிராச பண்டிதர் திருக்காளத்தி நாதர்மீது ஓர் உலாப் பிரபந்தத்தையும் பாடியுள்ளனர்.

இவ்வாறன பெருஞ் சிறப்புக்குக் காரணமான திருத் தலம் ஆதலின் ‘நல் காளத்தி’ என்று நம் ஐயா குறிப்பிட் டுள்ளார்.

இறைவி யாமளே, பிங்களே, நீலி, செய்யாள், வெளியாள் என்று போற்றப்படுவாள். இவ்வாறு போற்றப்படுதற்குக் காரணம் முறையே பச்சை நிற மும், பொன் நிறமும், கரிய நிறமும், செந்நிறமும், வெண்ணிறமும், அவளுக்கு உள்ளமை யால் என்க. ‘பரிமளே யாமளேப் பைங்கிளியே: என்றும் :பிங்கல நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண் கொடியே என்றும் அபிராமி அந்தாதி போற்றுதல் காண்க. குமர குருபரர், ‘மாணிக்கவல்லி, மரகதவல்லி” என்று தேவியைக் குறிப்பிட்டுள்ளனர். இன்னேர் அன்ன வண்ண வடிவு இறைவிக்கு இருத்தலினுல்தான் ‘வண்ணப் பசும் பொன் வடிவே’ என்று நம் ஐயாவால் போற்றப்பட்டனள். (7.1 ,

கற்பே விகற்பம் கடியும்ஒன் றேளங்கள் கண்திறைந்த பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணிய மேஅருள் போதஇன்பே சொற்பேர் அறிவுள் சுகப்பொரு ளேமெய்ச் கயஞ்சுடரே மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.

((பொ. - ரை.) ‘கற்புக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குபவளே மனக் கோணல்களே எல்லாம் ஒழிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/183&oldid=681675" இலிருந்து மீள்விக்கப்பட்டது