பக்கம்:திருவருட்பா-11.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 74 திருவருட்பா

ஒப்பற்ற தேவியே! எங்களுடைய கண்களுக்குக் காட்சிப் பொருளாய் நிறைந்து விளங்கும் தாயே! உண்மைத் தொண் டர்களின் புண்ணியமாய்த் திகழ்பவளே! அருளும், ஞானமும் வடிவாய்க் கொண்ட இன்பமே! சொல்லப்படுகின்ற பேரறிவுக் குள் இன் பப் பொருளாய் இருப்பவளே! உண்மையான இயற்கை ஒளியே! பெருமையும் பேரும் பெற்று ஒளிறும் திருஒற்றியூரில் வாழும் மானே! வடிவுடை மாணிக்கமே! (எ . து.)

(அ சொ.) விகற்பம் - மனக் கோணல். பொற்பு - அழகு, போதம் - ஞானம். சுயஞ்சுடர் - இயற்கை ஒளி. மல் - பெருமை. கடியும் ஒழிக்கும்.

(இ - கு.) மல்பேர், உம்மைத் தொகை.

(வி. ரை.) இறைவி ஒருத்தியே கற்புப் பண்புக் குரிய

வள். இதனைச் சிவப்பிரகாச சுவாமிகள்,

சோதிப் பதி அன்றி வேறொரு தெய்வம் தொழுதற்கில்லே

ஒதில் பிறர் என் அச்சம் உருமல் உயிர்கள் எல்லாம்

நீதிப் புதல்வர்கள் ஆயினர் ஆதலின் நீ கொள் கற்பது

பேதிப் பதன்றுகண் டாய்குன்றை வாழும் பெரியம் மையே’ என்று அறிவித்துள்ளனர். எனவேதான், கற்பே’ என்று நம் ஐயா விளித்துள்ளனர்.

மனம் ஒரு குரங்கு. ஆகவே அதன் குறும்பைக் குறிக்கும் கருத்தில்தான் விகற்பம்’ என்று கூறப்பட்டது. இந்த மனத்தின் கோணல் குறும்பு, இறைவியின் திருவருள் பெற்ற வர் முன் யாதும் செய்ய இயலாமல் ஒட்டம் எடுக்கும். ஆகவேதான் ‘விகற்பம் கடியும் ஒன்றே” எனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/184&oldid=681676" இலிருந்து மீள்விக்கப்பட்டது