பக்கம்:திருவருட்பா-11.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மண்ணிக்கமாலே 7

மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேன நீகை விடுதல்அருள் தகவே எனக்கும்.நல் தாயே அகில சராசரமும் சுகவேலே மூழ்கத் திருஒற்றி ஊர் இடம் துன்னிப்பெற்ற மகவே எனப்புரக் சின்றாேய் வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) எனக்கு தல் தாயாக விளங்குபவனே, உலகில் உள்ள அசையாப் பொருள்களையும் அசையும் பொருள்களையும் இன்பக் கடலில் முழ்கும் பொருட்டுத் திருஒற்றியூரினே இடமாகக் கொண்டு அணுகிவந்து அவற். றைப் பெற்ற பிள்ளைகளேப் போலக் காத்து வருகின்ற தாயே! வடிவுடை மாணிக்கமே! மிகுந்த துன்பக் கடலில் வீழ்ந்து வருந்துகின்ற என்ன நீ கைவிடுதல் உன் திருவருட்குத் தகுதியுடையதாகுமோ? “ (எ . து.)

(அ சொ) அகிலம் - உலகம். சரம் - அசையும் பொருள்கள். அசரம் - அசையாப் பொருள்கள். வே.ஆ . கடல். துன்னி - நெருங்கிவந்து மகவு - பிள்ளை. புரக் கின் ருேய் - காப்பாற்றுபவளே. தகவே - தகுதியுடைய தாகுமா?

(இ . கு.) சரம் + அசரம் எனப் பிரிக்க. வேலை மூழ்க, ஏழன் தொகை. மகவே, ஏகாரம் பிரிநிலை. மிகவே, ஏகாரம் அசை. தகவே, ஏகாரம் விஞ.

(வி - ரை.) இறைவி எங்கு இருந்தாலும் அந்தத்த இடத்திலிருந்து உயிர்களேத் தன் பிள்ளைகளைப் போதை காத்து வருகின்றாள் என்றாலும் நம் ஐயா திருஒற்றியூர்த் தேவியைப் போற்றுகின் ருர் ஆதலின், திருஒற்றியூர் இடம் துன்னிப்பெற்ற மகவே எனப் புரக்கின்றாேய்’ என் ருர், அசையும் பொருள்கள் ஆவன மக்கள், தேவர், விலங்கு, பறவை, நீர்வாழ்வன என்பன. அசையாப் பொருள்கள் ஆவன மலே, மரம், கட்டடம் முதலியன. நீ என் ல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/185&oldid=681677" இலிருந்து மீள்விக்கப்பட்டது