பக்கம்:திருவருட்பா-11.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#80 திருவருட்பச

எந்றே நீலஓன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் சற்றே நின் உள்ளம் திரும்பிலே யான்செயத் தக்கதென்னே சொற்றேன் நிறைகுறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே மற்றேர் அணிஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) சொற்களாகிய தேன் நிறைந்த வேத மாகிய கொம்பே உண்மை அறிவாகிய ஒளிப் பொருளே! மிக்க அழகு நிறைந்த திருஒற்றியூரில் வாழ்கின்ற வாழ்வே: வடிவுடை மாணிக்கமே! எத்தகைய நில ஒன்றும் இல்லாது வாடுகின்ற எனக்கு நீ திருவருள் புரிய r திருவுள்ளம் என்பால் சிறிதும் திரும்பவில்லையே! இதற்கு யான் செய்யத்தக்கது யாது? ஒன்றும் புரியவில்லையே: (எ . து.)

{அ - சொ:) மறை வேதம். ஏர் அணி, அழகு. எற்றே எத்தன்மைத்து, உயங்கும் - வாடும்.

(இ.கு.) சொல் + தேன் எனப் பிரிக்க. மற்று, அசைச் சொல். ஏர், அணி இரண்டும் ஒரு பொருளேயே: தருதலின் ஒரு பொருள் பன் மொழி ஆகும்.

(வி. ரை.) திருஒற்றியூரின் அழகு மிகுதியும் உடைமை யின் ஏர் அணி ஒற்றி’ எனப்பட்டது. ஏர் என்பதற்கு எழுச்சி என்றும் பொருள் காணலாம். (77)

செல்வேலை வென்ற கண் மின்னேநீன் சித்தம் திரும்பிஎனக் கெவ்வேலை செய்யென் நீடினும் அவ் வேலை இயற்றுவல்கண் தெவ்வேலை வற்றச்செய் அவ்வேனே ஈன்றாெற்றித் தேவர்நெஞ்சை வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.

பொ - ரை.) பகைவர்களாகிய கடல வற்றச் செய்யும் பொருட்டு அந்தச் செவ்விய முருகப் பெருமானப் பெற்றுத் திருஒற்றியூர்ப் பரமனது உள்ளத்தை வசப்படுத்தும் மணம் பொருந்திய மயிர்ச்சாத்தைப் பூசியுள்ள நீண்ட கூந்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/190&oldid=681683" இலிருந்து மீள்விக்கப்பட்டது