பக்கம்:திருவருட்பா-11.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருவருட்பா

வுடை மாணிக்கமே! நான் உனக்கு அடிமை. அப்படி இருக்க நீ என் குற்றங்களேயே கண்டு என்னைக் கைசோர விட்டால் ஐயோ! என்னத் தளராமல் தாங்குகின்றவர்கள் எவர் உளர்?’ (எ . து.)

(அ சொ.) நெறி வழி. வான் - ஆகாயம். ஏர் - அழகு. பொழில் சோலே.

(இ.கு.) அநதோ, இரக்கப் பொருளே உணர்த்தும் இடைச் சொல்.

(வி. ரை.) என் பிழைகளைக் குறியாமல் தம்மை ஆட் கொள்ளும்படி நம் ஐயா இப் பட்டின்வழி வேண்டுகோள் விடுகின் ருர், (80)

கல்லார் இடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கி இடர் நல்லாண்ம்ை உண்டருள் வல் ஆண்மை உண்டெனில் நல்குவையோ வல்லார் எவர்கட்கும் வல்லர் திருஒற்றி வாணரொடு மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை பாணிக்கமே.

(பொ-ரை.) வல்லவர் என்று சொல்லிக் கொள்கின்ற வர்கட்கெல்லாம் வல்லவராய் திருஒற்றியூரில் வாழும் இறை வருடன் வளம் பொருந்திய சோலேயுடைய திருஒற்றியூரில் விளங்கும் தேவி! வடிவுடை மாணிக்கமே! படியாதவர்க ளிடம் சென்று உளம் கலங்கி என் வறுமையைப் பற்றிக் கூறிக் கேட்கும். அத்தகைய நல் ஆண் ை என்னிடம் உண்டு. உன்னிடம் அருள் செய்கின்ற வன் ைமிக்க ஆண்மை உண்டு என்றால் அதனை எனக்குக் கொடுப் பாயோ?” (எ .து )

(அ - செ.) வாணர் - வாழ்பவர். மல் - வளப்பம். ஆர்- பொருந்திய. இல்லாமை - வறுமை.

(இ - கு.) வாழ்நர் என்பது, வாணர் என மருவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/194&oldid=681687" இலிருந்து மீள்விக்கப்பட்டது