பக்கம்:திருவருட்பா-11.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மானிக்கமாலை # 87

(அ சொ.) திரு . சிறந்த, பரம் . மேலான பரை - பரதேவதையே. நித்தம் - தினமும். சித் - அறிவு எற்கு . எனக்கு. நின் மலர் . தூயர். உன் மத்தர் - பித்தர். வாமம் - இடப்பக்கம்.

(இ கு.) கோயில், இலக்கணப்போலி. சுகம் டி. ஆதந்தம் என ப்பிரிக்க

(வி . சை.) இறைவிக்கும் இறைவனுக்கும் கோயில், மெய் அன்பர்களின் திருவுள்ளமே ஆகும். காயமே கோயி லசக” என்று அப்பர் கூறுதலும் இக் கருத்தைப் ஆகும். இறைவியின் குடும்பம் அன்பர்களின் உள்ளத்தில் தன்மைவது ஆதலின், அப்பரம்பரையைச் சார்ந்தவள் இறைவி என்னும் குறிப்பில் பரம்பரையே எனப்பட்டாள் எனினுமாம்.

‘உடம்பினே முன்னம் இழுக்கென் றிருந்தேன். உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று உடம்பினே யான் இருந் தோம்புகின் றேன்ே’ என்பர் திருமூலர். இக்கருத்துகளைப் பின்பற்றியே நம் ஐயா, ‘பத்தச்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே’ என்றனர். இறைவர் சுந்தரரால் பித்தர் எனப்பட்டார். ஆதலின் உன் மத்தர் எனப்பட்ட . (83}

பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் பாவாய் நிறைந்தபொன் பாவாய்செந் தேனில் கர்மொழியாய் காவாய் என அயன் காவாய் பலனும் கருதும்மலர் மாவாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. ரை.) ‘பூவையைப் போன்றவளே! அழகிய கூந்தலில் மலரை அணிந்திருப்பவளே! மெய் அன்பர்கள் பாடிய தமிழ்ப் பாட்டாய் விளங்குபவளே! நிறைந்த பொன் திறமான பது ைபோன்றவளே! நல்ல தேன்போலப் பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/197&oldid=681690" இலிருந்து மீள்விக்கப்பட்டது