பக்கம்:திருவருட்பா-11.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 2 of

முழுவருளேயும் தருவதுபோல் தராமல் போயினும், எள்ளளவு அருளேயேனும் தந்து காப்பாற்ற என்மீது கருணை காட்டுவா யாக!” (எ . து.)

(அ சோ.) எழில் அழகு. தற்பரை . மேலானவள்: பரதேவதை. நலம் - முத்திதலம். உலவேனுக்கு வருந்து கின்றவளுகிய எனக்கு.

(இ . கு.) இடர் கொண்டு, கொண்டு மூன்றாம் வேறி றுமைச் சொல் உருபு. உலேவேனுக்கு, வினேயால் அணையும் பெயர். -

(வி ரை.) தற்பரன் இறைவன் ஆதலின் தற்பரை இறைவி ஆயினுள். மக்களுள் ஒருசிலர் இரக்கத்தால் பிறக்கு அருள் செய்தாலும் அவ்வருள் நாளடைவில் குறைந்துவிடும். ஆனல், அதியமானப் போன்ற சங்ககால வள்ளல்கள் அருள் செய்வதில் சிறிதும் தளராமல் என்றும் செய்துகொண்டே இருப்பர். இதனை ஒளவையார், “ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம் பலநாள் பயின்று பல ரொடு செல்லினும் தலைநகள் போன்ற விருப்பினன் மாதோ அணிபூண் அணிந்த யானே இயல்தேர் அதியமகன் பரிசில் பெறுர உம் காலம் நீட்டினும் நீட்டா தாயினும் யானதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய் ஆ க. தே அருந்தே மாந்த நெஞ்சம் வருந்த வேண்ட் வாழ்கவன் தாளே’ என்று அதிய கான் நெடுமான் அஞ்சியை வாழ்த் தியுள்ள பாட்டால் நன்கு உணர்கின்றாேம். சில் வாழ்நாள் சிற்றறி வுடைய மக்களே சாயாது அருள் புரிவாராயின், திருவருளேயே திருமேனியாகக் கொண்ட இறைவியின் அருள் சாயும் தன்மையதோ? ஆகவேதான் சாயா அருள்தரும் தாயே” என்றனர். நலம் ஈண்டு வீட்டின் பமாகிய நலத்தைக் குறித்து திரிகிறது. ‘முத்திநலம்” என்று நம் மணிமொழியார் கூறி அள்ளதை ஈண்டு நிகனவு கூர் க. (95)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/211&oldid=681709" இலிருந்து மீள்விக்கப்பட்டது