பக்கம்:திருவருட்பா-11.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே

கடித்தபோது அ.து. இனிக்கக் கண்டனர். இதனே அவரே,

கண்டம் கரியதாம் கண்மூன் றுடையதாம் அண்டந்தைப் போல அழகியதாம்-தொண்டர் உடல் உருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக் கடல் அருகே நிற்கும் கரும்பு ‘ என்று பாடி இருக்கின்றனர். இத்தலம் அவருக்குச் சிவ மயமாகக் காட்சி அளித்ததையும்,

வாவிஎலாம் தீர்த்தம் மணல்எல்லாம் வெண்ணிறு காவணங்கள் எல்லாம் கனநாதர்-பூவுலகில் ஈது சிவலோகம் என்றென்றே மெய்தவத்தார் ஒதும் திருவொற்றி ஆர் “ என்றும் சிறப்பித் துள்ளனர். மேலும் அவர் திருஒற்றியூரின் மாண்பினை,

ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக் கிடுமருந்தை யானறிந்து கொண்டேன்-கடு வருந்து தேவாதி தேவன் திருஒற்றி பூர்த்தெருவில் போவார் அடியின் பொடி’ என்றும் புகழ்ந்துள்ளார்.

திருவொற்றியூரில் அப்பர் பெருமான் ஆலயமும், இராமலிங்கசுவாமிகள் ஆலயமும் உள்ளன. இவற்றைக் கடற்கரைக் காட்சியைக் காணச் செல்லும் போது கண்டு களிக்கலாம்.

இத்தலத்து இறைவியின் திருப்பெயர்கள், திரிபுரசுந்தரி, வடிவுடை அம்மையார் என்பன. இவ்வம்மையார் சந்நிதி கோவிலுக்கு வெளியே வடப்பக்கத்தில் அமைந்துளது. இவ்வம்மையாரை வணங்கிப் பெரும்பேறு அடைய ஒவ் வொரு வெள்ளிக்கிழமையும் பரம ஏழை முதல் பெருஞ் செல்வர் வரை திரள் திரளாக வந்து தரிசித்துச் செல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/25&oldid=681720" இலிருந்து மீள்விக்கப்பட்டது