பக்கம்:திருவருட்பா-11.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவருட்பா

பாகத்தே கொண்டுள்ள சிந்தாமணியே! என் கண்ணுள் விளங்கும் மணியே! வடிவுடை மாணிக்கமே” (எ . து.)

(அ - சொ.) அணி அழகு, அலங்கார்ம். கோன் . அரசன். பணியேன் - வணங்காதவன். தெய்வப்பதி - சிவபெருமான,

(இ - கு.) தம், அசைச்சொல். பணியேன், வினேயால் அணையும் பெயர். சிந்தாமணி, உவம ஆகுபெயர்.

(வி - ரை) தியாகரைப்பற்றிய குறிப்பைக் காப்புச் செய்யுள் விரிவுரையில் காண்க. குணமாவன பண்புகள். அப் பண்புகளைக் கொண்டு விளங்குவது குனரி. இறைவி பல அருங்குனங்களுக்கு உறைவிடம் ஆதலின் குணியே எனப்பட்டாள். இறைவி நம் வள்ளலாரின் வாழ்வுக்கு மட்டும் தெய்வமாக இன்றி, அவர்தம் குடும்பத்துக்கும் தெய்வம் ஆதலின் எம் வாழ்க்கைக் குலதெய்வமே எனப் பட்டனள். இறைவனைப் பணியாதவர் அறிவினர்கள். அவ்வறிவினர்களின் செயலேத் தம் மேல் ஏற்றி நம் ஐயா, ‘பணியேன்” என்று கூறிக்கொள்கின்றனர். குழந்தைக்கு நோய் கண்டபோது தாய் மருந்துண்பதுபோல் இக்கருத்தைக் கொள்ளவேண்டும். -

சிந்தாமணி என்பது ஒர் உயர்ந்த கல். இது தேவலோ கத்தில் இருப்பது. கேட்டவை யாவற்றையும் தரவல்லது. அக் கல் இவ்வுலகச் சிற்றின்பப் பொருள்களை மட்டும் கொடுக்கவல்லது. ஆளுல் இறைவியோ, இம்மை இன்பத் தோடு மறுமை இன்பத்தையும், பேரின் பமாகிய வீட்டின்பத் தையும் கொடுக்கவல்லவள். தெய்வலோகச் சிந்தாமணி இந்திரனிடம் உள்ளது. இறைவியாம் சிந்தாமணி தெய்வம் பதி (சிவபெருமான்) கொள் சிந்தாமணி. அதனுல்தான் இச் சிந்தாமணி இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/34&oldid=681730" இலிருந்து மீள்விக்கப்பட்டது