பக்கம்:திருவருட்பா-11.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலை 25

கொடுக்கும் நிலையில் உள்ளது. பெருமைக்குரிய சிவபெருமான் செத்துப் பிறக்கின்ற தெய்வங்களைப்போல் இன்றிச் சாவாது மூவாது இருத்தலின், தெய்வப்பதி எனப்பட்டான். (2}

மானேர் விழிமலை மானோம் மான்இடம் வாழ்மயிலே கானேர் அளகப் பசுங்குயி லேஅருள் கண்கரும்பே தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவ சத்தியே! வானே கருtண வடிவே வடிவுடை மாணிக்கமே.

(யொ - ரை.) மான் கண்களுக்கு ஒப்பான கண்களே யுடைய மலேயரசன் பெற்ற மான் போன்றவளே எம்பெரு மானுகிய சிவபெருமானின் இடப்பாகத்தே வாழ்கின்ற மயிலே! காடுபோல் அடர்ந்து இருண்டு விளங்கும் கூந்தலுடைய பசுங்குயிலே அருளாகிய கண்களைப் பெற்ற கரும்பே ! தேனே ! திருஒற்றியூராகிய சிறந்த நகரில் வாழும் சிவ சத்தியே ஆகாய வடிவினளே கருணை வடிவுடையவளே ! வடிவுடை மாணிக்கமே!” (எ . து.)

(அ சொ.) தேர் - ஒப்பான. எம்மான் - எம்பெரு மாளுகிய சிவபெருமான். கான் - காடு, அளகம் கூந்தல். மா - சிறந்த வான் - ஆகாயம்.

(இ - கு.) நேர், உவம உருபு. மான்-நேர். கான்-- நேர் எனப் பிரிக்க. மா, உரிச்சொல். மான், மயில், தேன், கரும்பு உவமை ஆகுபெயர்கள். எம்பெருமான் என்பத. எம்மான் என ஆயது மருஉ வழக்காகும்.

(வி ரை.) பெண்களின் கண்கள் மிகுதியும் மருளும் தன்மையன. மான் கண்ணும் அத்தகையனவே. இது: குறித்தே புலவர்கள் பெண்களின் கண்களுக்கு மானின் கண்ணே உவமை கூறுவர். இறைவி மயிலக் கபாலீச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/35&oldid=681731" இலிருந்து மீள்விக்கப்பட்டது