பக்கம்:திருவருட்பா-11.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிங்டை காணிக்கமாலே 2

இறைவிக்குரிய பெயர்களுள் அந்தரி என்பதும் ஒன்று. அந்தரம் என்பதன் பொருள் ஆகாயம். ஆகவே, இறைவி பராகாசவடிவினள் ஆதலின், அந்தரி எனப்படுவள். சிதா காச வடிவினன் என்று கூறினும் பொருத்தமே. இதனுல்தான் இறைவி தகராகாசருபிணி என்று கூறப்படுகின்றாள். இந்த அரிய கருத்தில்தான் நம் ஐயா தூய தமிழ்ச் சொல்லில் ‘வானே’ என்று தேவியை விளித்தனர்.

சேக்கிழார் இறைவியைப் பற்றிக் கூறுகையில் ‘அருட் கருணத் தாயை திருவுள்ளமுடைய தவவல்லி” என்று. உணர்த்தியுள்ளனர். அதல்ைதான் ஐயா கருணை வடிவே” என்றனர்.

இறைவியின் கருணை அவளுடைய பிள்ளைப் பருவத்தி லேயே அமைந்திருந்தது என்பதை மீனுட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் மிக அழகாக,

‘கிள்ளேக்கு மழலைப் பசுங்குதலே ஒழுகுதீங்

கிளவியும் களிமயிற்குக் கிளர் இளம் சாயலும் நவ்விக்கு நோக்கும்விரி

கிஞ்சுகச் சூட்டரசனப் பிள்ளைக்கு மடநடையும் உடன்ஆடும் மகளிர்க்கோர்

பேதமையும் உதவி முதிராப் பிள்ளை மையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு

பாண்டிப் பிராட்டி.’

என்று பாடுதலேப் படித்து மகிழவும். இந்த அளவிலும் அவளது கருணை நிற்கவில்லை. கல்லா மூடர்களுக்கும் இன்பம் செய்பவள். இதை மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், கல்லா மூடர் மதிக்கும் இனித்துக் கமழும் பைந்தேனே’ என்று கூறுதல் கொண்டு தெளிக. (3}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/37&oldid=681733" இலிருந்து மீள்விக்கப்பட்டது