பக்கம்:திருவருட்பா-11.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவருட்பா

பொருளே அடியர் புகல்இட மேஓற்றிப் பூரன்ைதன் அருளே எம்ஆர் உயிர்க் காம்துணை யேவிண் ணவர் புகழும்

தெருளே மெய்ஞ்ஞானத் தெளிவே மறைமுடிச் சேம்பொருளே மருளே தம்நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.

(பெ. ;ை.) எல்லாப் பொருளுமாய் இருப்பவளே! அடியவர்கள் சரண் புகுதற்குரிய இடமாய் இருப்பவளே! திருஒற்றியூரில் நிறைவாய் விளங்கும் தியாகப்பெருமானின் அருளாய் இருப்பவளே! எங்கள் அரிய உயிர்களுக்குத் துணேயாய் இருப்பவளே! தேவர்கள் போற்றும் அறிவின் விளக்கமே மெய்ஞ்ஞானத்தர்ல் தெளியப்படும் பொருளே! வேத முடிவில் திகழும் செம்பொருளே! என் மயக்க உணர் வையும், குற்றத்தையும் ஒழிக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே!” (எ . து.)

(அ செ. புகல் இடம் . அடைக்கலம் புகும் இடம். பூரணம் - நிறைவு. விண்னவர் - தேவர். தெருள் - அறிவு. மறைமுடி - வேதத்தின் அந்தம். மருள் - மயக்கம். ஏதம் - குற்றம், துன்பம்.

இ - கு) கன், அசைச்சொல். அருமை + உயிர்= ஆருயிர். ஆம் ஆகும் என்பதன் தொகுத்தல் விகாரம். மருள் ஏதம், தொகை.

(வி - கை.) இறைவி எல்லாப் பொருளும் ஆவாள் என் பதை அபிராமி அந்தாதி, தரங்கக் கடலுள் வெங்கண் பணி அணமேல் துயில் கூரும் விழுப் பொருளே “ என்று போற்றுகிறது. திருப்பாற்கடலில் பாம்பு படுக்கையில் துயில்பவர் விஷ்ணு என்றாலும், அவ்விஷ்ணு உமையே ஆவாள். அதுபோது அவளுக்கு வைஷ்ணவி என்னும் பெயர் அமைகிறது. சகஸ்தரள புஷ்பமிசை வீற்றிருக்கும் நாரணி” என்று தாயுமானவர் கூறுதலும் இக்கருத்தில்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/38&oldid=681734" இலிருந்து மீள்விக்கப்பட்டது