பக்கம்:திருவருட்பா-11.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்க மாலை 39

இந்த வைஷ்ணவியின் கோயிலேச் சென்னைக்கு அடுத்த அம்பத்துளரின் அருகே கண்டு தரிசிக்கலாம்.

இறைவியின் திருவடியே யாவரும் தஞ்சம் புகுதற்குரிய இடம். இதனே அபிராமி அந்தாதி, ‘ அருளும் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்

தருணும் புயமுலேத் தையல்நல் லாள்த கை சேர்நயனக் கருளும் புயமும் வதனும் புயமும் கராம்புயமும் - சரணும் புயமும் அல் லால்கண்டி லேன் ஒரு தஞ்சமுமே ‘ என்று உறுதிப்படுத்துவது கொண்டு உணர்க. எனவேதான் * அடியர் புகல் இடமே ‘ என்றனர் நம் வள்ளலார்.

இறைவனுக்கு அமைந்த தேவி, ஏனேய பெண் வடி வங்களேப் போன்று எலும்பு, தசை முதலியவற்றால் ஆனவள் அல்லள். இறைவன் தன் அருளேயே சத்தியாக (தேவியாக)க் கொண்டு விளங்குகின் ருன். இந்த உண்மையினேச் சாத்தி ரங்களும், புராணங்களும், தோத்திரங்களும் கூறுகின்றன. 3 அருளது சத்தி ஆகும் அரன் தனக் கருளே இன்றித்

தெருள் சிவம் இல்லே அந்தச் சிவம்இன்றிச் சத்தி இல்லை மருளினே அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட் கிருளினே ஒளியால் ஒட்டும் இரவியைப் போல ஈசன் ‘’ என்று சிவஞான சித்தியாரும்,

மேனுள் அகிலம் தரமெல் இயலா

ஆன அருள் தன் னேஅளித் தொருபால் தான க.இருத் தியதற் பரனே ஆ ைமயல்செய் வதுநன் றிதுவே ” என்று கந்தபுராணமும்,

‘ ஒன்றும் அரும்பொரு ளே அரு ளேஉமை யேஇமயத் தன்றும் பிறந்தவளே அழி யாமுத்தி ஆனந்தமே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/39&oldid=681735" இலிருந்து மீள்விக்கப்பட்டது