பக்கம்:திருவருட்பா-11.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 0 திருவருட்பா

என்று அபிராமி அந்தாதியும் கூறுதல் காண்க. எனவே: தான் இங்கும் ஒற்றிப் பூரணன்தன் அருளே’ எனப்பட்டனள். தேவர்கள் இறைவியைப் புகழ்கின்றனர் என்பதன் கருத்து, போற்றுகின்றனர் என்பதாம். இதனை அபிராமி பட்டர் தம் அபிராமி அந்தாதியில், முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே ‘ என்றும்,

வந்திப் பவர் உன்னே வானவர் தானவர் ஆனவர்கள் சிந்திப் பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே பந்திப் பவர் அழி யாப்பர மானந்தர் பாரில் உன்னேச் சந்திப்பவர்க்கெளி தாம்எம்பி ராட்டிநின் தண்ணளியே ‘ என்றும் அறிவித்தல் காண்க. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் * தேவர்தொழும் கல்யாண செளந்தரி ‘ என்று கூறுதலையும் உணர்க. ஆகவே ஈண்டு நம் வள்ளலார் ,விண்ணவர் புகழும் தெருளே “ என்றனர்.

இறைவி வேதத்தின் கிளே, கொழுந்து வேர் ஆகவும் முன்னுகி, நடு முழுவதும் ஆகி, முடியும் ஆகவும், விளங்கு பவள். இதனைச் சுருதிகளின் புனேயும் கொழுந்தும், பதி கொண்ட வேறாம் திருபுரசுந்தரி ஆவது அறிந்தனமே” என்றும் ‘அருமறைக்கு முன்னுய் நடு எங்குழாய் முடிவாய முதல்வி என்றும் அபிராமி அந்தாதி கூறுகின்றது. இதே கருத்தில் ஈண்டு மறைமுடிச் சொம்பொருளே “ எனப் பட்டது. (4)

திருமாலும் நான்முகத் தேவும்முன் நாள் மிகத் தேடிமனத் கருமால் உழக்க அனல்உரு வாகி அமர்ந்தருளும் பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம் மான்கொளும் பித்தன்மலை மருமான் இடம்கொள் பெண் மானே வடிவுடை மாணிக்கமே. (பொ. ரை.) ‘விஷ்ணுமூர்த்தியும், பிரம்மதேவனும் முன்பு சிவபெரும்ானத் தேடி உள்ளத்தில் நினத்தற்கும் அரிய மயக்கத்தால் வருந்தத் தீப்பிழம்பாய் விளங்கித் திகழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/40&oldid=681737" இலிருந்து மீள்விக்கப்பட்டது