பக்கம்:திருவருட்பா-11.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமால 37

புள்ளி, கமண்டல உரு, கறுப்பும் மஞ்சளும் கலந்த நிறம், நீல நிறம், வேற்றிடத் துவாரம் என்பன. மேலும், காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நில என்பன. இங்ஙன்ம் முத்து களுக்குக் குற்றம் இருப்பதளுல்தான். மீனுட்சி அம்மை பிள்ளைத் தமிழ், இறைவியின் முத்தைச் சிறப்பித்து, ஏனேய முத்துகளை ஒதுக்குகிறது. இக் கருத்தடங்கிய பாடல்,

‘ கொழுதி மதர்வண் டுழக்குகுழல்

கோதைக் குடைந்த கொண்டலும் நின் குதலைக்கிளிமென் மொழிக்குடைந்த

குறுகண் கரும்பும் கூன்.பிறைக்கோ குழுத பொலன்சி றடிக்குடைந்த

செந்தா மரையும் பசுங்கழுத்துக் குடைந்த கமம்சூல் சங்கும் ஒழு

கொளியகமுகும் அழகுதொய்யில் எழுது தடந்தோள் குடைந்ததடம்

ப8ணயும் பண்ேமென் முலேக்குடைந்த இணைமா மருப்பும் தருமுத்துன்

திருமுத்தொவ்வச இகபரங்கள் முழுதும் தருவாய் நின் கனிவாய்

முத்தம் தருக.முத்தமே முக்கட் சுடர்க்கு விருந்திடும்மும்

முலையாய் முத்தம் தருகவே.” என்பது.

இருபது இடங்களில் பிறக்கும் முத்துகள் தேவையே இல்லை என்னும் குறிப்பில், திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் கூறி முருகனது முத்தை விருப்பிப் பாடியுள்ள பாடல்கள் மிக்க சுவை உடையனவாகவும், முருகன் திருவருளேப் பெறு தற்கு உரியனவாகவும் இருத்தலின் அவற்றைப் படித்தின் புறுதல் வேண்டும் என்னும் கருத்தில் அவையும் இங்குத் தரப்படுகின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/47&oldid=681744" இலிருந்து மீள்விக்கப்பட்டது