பக்கம்:திருவருட்பா-11.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 3

ஒளேக்கும் குமுதக் கனிவாயால்

முருகா முத்தம் தருகவே முத்தம் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா முத்தம் தருகவே ‘

ஆான் பன அப்பாடல்கள்.

ஆகவே, இறைவியாம் முத்து, குற்றம் குறைகள் இல்லா முத்தாக இருத்தலின் நம் ஐயா மலேயான் தவம் செய்து இயற்றமுத்தே ’’ என்றனர்.

இறைவன் இறைவிக்கு வேதத்தின் பொருளை இரகசிய 4ாகக் கூறிக் கொண்டிருந்தான். ஆனுல், உமாதேவி அதனே விருப்பம் இன்றிக் கேட்டனள். இதனுல் இறைவன் தேவியைச் செம்படவர் மகளாகப் பிறக்குமாறு பணித் திட்டான்.

இறைவி தன் குற்றத்தை உணர்ந்து இறைவ! நான் எப்படி உங்களைப் பிரிந்து வாழ்வேன்” என்று வருந்திக் கூறினுள். இறைவன் மன இரக்கம் கொண்டு, ‘நீ செம்படவர் மன்னனுக்கு மகளாகப் பிறந்து வளர்கையில், யாம் வந்து மணப்போம்” என்று அருள் செய்தான்.

இந்நிலையில் இறை அன்புகொண்ட வலைஞன் தனக்கு மகவு இன்மை குறித்து இறைவனிடம் முறையிட்டு வருகையில், அவ:னது மனக்குறையை நீக்க இறைவி Li மர நிழலில் குழந்தை வடிவில் தோன்றி அழத் தொடங் கிளுள். அவ்வழுகுரலைக் க்ேட்ட செம்படவர் மன்னன் அக் குழந்தையை எடுத்து வளர்த்தான்.

நந்தி எம்பெருமானும் இறைவன் சாபத்தால் சுரு மீன் வடிவுடன் கடலில் இருந்து கொண்டு செம்படவர்களுக்குப் பெருந் தொந்தரவு தந்து வந்தார். வலஞர் தலைவன் அம் மீனப் பிடிக்கிறவர்களுக்குத் தன் மகளே மண முடித்துத் தருவேன் என்று கூற அவனது மகளை மணக்கப் பலரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/49&oldid=681746" இலிருந்து மீள்விக்கப்பட்டது