பக்கம்:திருவருட்பா-11.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவருட்பா

வ&னக் காண இயலாதவை. வேதங்கள் இறைவ்ன்க் காண முடியாமல் கதறியதை மணிவாசகர் வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியனே’ என்றனர். பரஞ்சோதியாரும் வேதங் கிடந்து கடுமாறும் ஞ்சவெளி’

என்றும், எதிர்மறை எட்டும் தோறும் வஞ்சனுய் அகல் வான்’ என்றும் கூறினர். இருக்காதி சதுர்வேதம் இசைப் தும் நின் பல பேதம், ஒருக்காலும் ஒன்றுரைத்தது ஒன்றுரைக்க் அறியாதே,” என்று அருணக் கலம்பகமும் கூறுகிறது. ஆனல், தமிழ்மறைகள் இறைவனே அறியவல்லன. பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே” என்று இறைவனேக் கண்டு கூறியது திருஞான சம்பந்தர் திருவாய் மலர்ந்த வேதம்தானே. அப்பர் தம் தாண்டகங்களில் கண்டாய், காண்க என்று கூறியிருப்பதும், திருவாதவூரர் திருவாசகத்தில் காண்க என்று கூறுவதும் தமிழ் மறையி ளுல் இறைவனேக் கண்ட உண்ம்ையை உண்ர்த்துவதற்காக அல்லவோ ? இது கொண்டுதானே பரஞ்சோதியார் ‘தமிழ் அறியும் பெருமானே’ என்றனர்.

அந்தம் என்பது வேதாந்தம். அந்ததரம் என்பது வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம். இந்த உண்ம்ை மெய்கண்டார் வாக்காகிய ‘சிவம் என்னும் அந்ததர என்னும் அருந்தொடரால் புலகுகின்றது.

வேதாந்தம் என்பது உபநிடதங்களே க் குறிக்கும். வேதக் கருத்தை விளக்க வந்த உபநிடதங்கள் ஒரு முகமாக முடிந்த முடியாக எதையும் உணர்த்தாமல் பல திறப்பட்டுப் பிணங்கு வன ஆயின. இந்த வேதாந்தங்கள் கேவலாத்துவிதம் சுத்தாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதம் என்னும் மாறுபட்ட கருத்துகளுக்கு இடஞய அமைந்துவிட்டன. இதல்ைதான், நீலகண்டர், சங்கரர், இராமாநுஜர், மாத்துவர் ஆகியோர்களின் கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/54&oldid=681752" இலிருந்து மீள்விக்கப்பட்டது