பக்கம்:திருவருட்பா-11.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவருட்பா

‘'ஆற்றலில் தம்முடல் அலசப் பற்பகல்

நோற்றவர் அல்லரோ துவலல் வேண்டுமோ

தேற்று கிலிர்கொலோ தேவர் ஆகியே

மேற்றிகழ் பதத்தொறும் மேவுற் ருேர்ளலாம்’ என்று கந்த புராணமும்,

‘'வேண்டின வேண்டினர்க் களிக்கும் மெய்த்தவம்’ என்று கம்ப ராமாயணமும்,

‘பண்ணிய தவத்தால் அன்றி யாதானும் படுபொருள்

பிறிதில்லை’

என்று திருவிளையாடல் புராணமும் கூறுகின்றன.

இத்தகைய அரும் பெரும் தவத்தைத் திருமால் செய்து தான் இறைவியைத் தங்கை எனக் கூறும் தகைமை பெற்ற கrன் என்று வியந்து, ‘நினைத் தங்கையாகப் பகரப் பெற்ற மாலே தவத்தில் பெரியோன்’ என்றனர்.

தாயுமானவரும் இறைவியை நோக்கி, மதுசூதனன் தங்கையே” என்று கூறியுள்ளனர். அபிராமி பட்டரும் {அபிராமி அந்தாதியின் ஆசிரியர்) முகுந்தற்கு இளைய வளே’ என்றனர்.

இறைவனுக்கு ஆதிசத்தி, பராசத்தி, கிரியா சத்தி, ஞான சத்தி எனப் பலவகைச் சத்திகள் உளர். அவர்களுள் திருமாலும் ஒரு சத்தியே. அரியலால்தேவி இல்லை” என்பது அப்பர் வாக்கு. நால்வகைச் சத்திதன்னுள் மாலும் ஒருசத்தி.” என்பதும் இக்கருத்தையே ஒட்டி எழுந்தது. எனவே, திருமாலுக்குத் தங்கையானுள் இறைவி, அரன் என்பது ஆண்பால். இந்த ஆண்பாலுக்கு அரி என்பது பேண்பால். ஆகவே, அரி இறைவனுக்குச் சத்தியாயினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/56&oldid=681754" இலிருந்து மீள்விக்கப்பட்டது