பக்கம்:திருவருட்பா-11.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.2 திருவருட்பா

என்று கூறுகிறது. இந்த வரலாற்றுக் குறிப்பே ஈண்டு ‘தொண்டர் அன்பின் வேலையிட்டால் செயும் பித் தன் “’ எ ைப்பட்டது. ஒரு பெண்ணின் ஊடலைத் தீர்க்க வேதம் காணு, வேய்ங்குழலோன் காணு, முழுமுதற் பொருள் துாது சென்றமையின் பித்தன் என்று ஏளனமாகக் கூறப்பட்டது. இந்த ஒரு காரணத்தால் மட்டும் இறைவன் பித்தன் இல்லையாம். பல காரணங்களாலும் இறைவன் பித்தனும். இதனே வேடிக்கையாகக் காளமேகப் புலவர்,

‘ கண் டீரோ பெண் காள் கடம்பவனத் தீசனுர்

பெண்டீர் தமைச்சுமந்த பித்தனுர்-எண் திசைக்கும்

மிக்கான் தங்க்ைக்கு மேலே நெருப்பை இட்டார்

அக்காள்ே ஏறிஞ ராம் ” என்று பாடுதல் காண்க,

கயாசுரன் என்பவன் ஒருவன். அவன் யானைமுகமுடை யன் அவன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெருந்துன்பத் தைப் புரிந்து வந்தான். இதனுல் அவர்கள் காசிக்குச் சென்று விசுவேசுவரரைச் சரண் புகுந்து கயாசுரனது துன்பத்தி லிருந்து மீட்க வ்ேண்டிக் கொண்ட்னர். இறைவர் தம்மை அடைக்கலம் புகுந்தவர்களேக் காக்க ‘உக்கிரப் பெருவடிவு கொண்டு, தம் விழிவழித் தீப்பொறிய்ைச் செலுத்தி அசுரனக் காலால் உதைத்துத் தள்ளித் தலையை மிதித்துத் தம் நகங்களால் அவன் உடலப் பிளந்து, அவன் தோல உரித்து, உமாதேவி அஞ்சும்படி தம் உடலில் போர்த்துக் கொண்டார். இதல்ை இறைவர்க்குச் கஜயுத்த மூர்த்தி எனும் பெயரும் உண்டாயிற்று. இதனேக் கந்த புராணம்,

“ மதித்து வேழமாம். தானவன் வருதலும் வடவை உதித்த வன்னியும் அச்சுற எரி விழித் தொருதன் கதித்த தாள் கொடு தள்ளவே, கவிழ்ந்து பதைத்து வீழ்தலும் மிதித்தனன் சிரத்தை ஒர் பதத்தால் “

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/62&oldid=681761" இலிருந்து மீள்விக்கப்பட்டது