பக்கம்:திருவருட்பா-11.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 5

(வி - ரை.) நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அதன் வது ‘சிவனுக்குமேல் ஒரு தெய்வம் இல்லை. சித்திக்கு மேல் ஒரு சாத்திரம் இல்லை” என்பது. சித்தி என்பது சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதின்ைகனுள் ஒன்று. இறை: வனப் பிறதேவர்கள் வணங்கவரே அன்றி இறைவன் பிறரை வணங்குவதில் லே. இதனே மணி மொழியார், ‘சேர்ந்தறியாக் கையான் ‘ என்றனர். ஆகவே, இறைவன் தன ஆள்பல இன்றி நிற்கும் பரமன் ஆயிஞர். இறைவி இறைவனது அருளே ஆவாள். அருளது சத்தியா கும் என்பது முன்பும் கூறப்பட்டது.

உயிர்கள் செய்யும் செயல்கள் நல்வி ைதீவினை எனப் பகுக்கப்படும். இந்த இருவிக்னகளே அவ்வவ் உயிர்கள் அனுபவித்தே தீர வேண்டும். ஆன்மாக்கள் நல் வினே தீ வினே என்னும் இருவினக்கு ஈடாக நால்வகைத் தோற்றத் தையும், எழுவகைப் பிறப்பையும், எழுபத்துநான்கு யோனி பேதங்களே யும் உடையனவாய்ப் பிறந்து இறந்து உழலும். இதனுல் இங்கு, விகின ஆள் உயிர்’ எனப்பட்டது.

ஆணவ மலத்துக்குச் சகசமலர் என்னும் பெயரும் உண்டு. இதன் பொருள் உடன் தோன்றியது என்பது. அம்மலம் ஆன்மாவுடன் கலந்தே இருக்கும். அஃது ஆன் ம அறிவை மறைத்து, தன்னேயும் காட்டாது. ஆணவ மலம் பேரிருள் மயமானது. ஆணுல் இருள் பொருள்களே மறைத் தாலும் தன் வடிவைக் காட்டும். ஆளுல் ஆணவம், தன்ணே யும் காட்டாது ; பிற பொருளே யும் காடடாது. இதனே,

  • ஒருபொருளும் காட்டா திருள் உருவம் காட்டும் இருபொருளும் காட்டா திது .

என்று திருவருள்பயன் கூறுகிறது.

இந்த ஆணவ மலம் நீங்க வேண்டுமானல், சிவசக்தி பின் தாக்குதலால் ஆன்மா உடலை எடுக்கவேண்டும். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/65&oldid=681764" இலிருந்து மீள்விக்கப்பட்டது