பக்கம்:திருவருட்பா-11.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவருட்பா

(பொ. - ரை.) கரிய மை நிறைந்த கண்களே யுடையவளே! திருஒற்றியூரில் வாழ்பவளே! வடிவுடை மாணிக்கமே! பாம்பின் படத்தைப் போன்ற குறியுடைய தேவமாதர்கள் பலருக்குள் இந்த இலக்குமியும், வெண்ணிற உடல்பெற்ற சரசுவதியும் உனக்குக் கையாளாக இருந்து உன் திருவடிகளுக்குச் சிறுசிறு வேலைகளைச் செய்ய நீ கடைக்கண் சாத்தி, திருவருள் செய்துள்ளாயே அவ்வாறு உனக்குத் திருப்பணி செய்ய அவர்கள் செய்த தவம்தான் எதுவோ?” (எ . து.)

(அ - செr.) பை - படம் எடுத்தாடும் பாம்பு. அல்குல் - பெண்குறி. சுரர் மடவார் - தேவ மாதர்கள். செய்யாள் - இலக்குமி வெண் ணிற மெய்யாள் - சரசுவதி. மெய் - உடல். கடைக்கணித்தாய் - திருக்கண் சாத்திய்ை, திருவருள் புரிந்தாய்.

(இ கு.) குறு + ஏவல்.

(வி - ரை.) இறைவிக்குச் சேடிமார்களாக அமைந்த வர்கள் அலைமகளும், கலைமகளுமே ஆவர். இவர்கள் என்றும் இறைவிக்குத் தொண்டு செய்யும் பால் மையர் என்னும் குறிப்பை உணர்த்தும் முறையில் தான், காஞ்சி கா மாட்சி அம்மன் உற்சவ திருமேனிக்கு வலத்தும், இடத்தும் இலக்கு மியும், சரசுவதியும் இருந்துகொண் டிருக்கின்றன. சி. இந்தக் காட்சியை இன்றும் அங்குக் காணலாம். இறை விக்கு அலங்காரம் செய்பவர்களும் அவர்களே. இதனைத் திருவிளை யாடல் புராணம்,

‘செம்மலர்த் திருவும் வெள்ளே ச் செழுமலர்த் திருவும் தங்கள் கைம்மலர்த் தவப்பே றின்று காட்டுவார் போல நங்கை அம்மலர் அனிச்சம் அஞ்சும் அடியில்செம் பஞ்சு தீட்டி மைம்மலர் குழல்மேல் வாசக் காசறை வழியப் பெய்து’

என்று கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/68&oldid=681767" இலிருந்து மீள்விக்கப்பட்டது