பக்கம்:திருவருட்பா-11.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவருட்டா

(வி ரை.) இறைவி இல்லறம் நடத்தியதாக இதுவரை யில் நாம் அறிந்தோம் இல்லே ஆதலின், இலே ஆற்றும்’ என்ப. தற்கு வீடுகட் டி சோறு சமைத்து ஆடிய இள:ைச் செயல் இங்குக் குறிப்பிடப்பட்டது. இந்தக் குறிப்பைக் குமரகுருபரரது மீட்ைசி அம்மை பிள்ளே த்தமிழில் வரும், சுற்றுரு நடுநேமி” என்று தொடங்கும் பாடலில் காணவும். அதன் ஈற்றுவரி, ‘சிற்றில்விளே யாடும்.ஒரு பச்சிளம் பெண் பிள் கா’ என்பது. ‘காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வேன்’ என்னும் பழமொழி இப்பாட்டில் இருப்பதைக் காண்க. மெய்ஞ் ஞானத் தொண்டர்கள் செல்வத்தை ஒரு பொருளாக மதிக்க மாட்டார்கள். இதனைத் திருவிளேயாடல் புராணம்,

‘புள்ளியதோல் ஆடை புனேந்தரவப் பூண் அணிந்த வெள்ளிய செங்கண் விடையான் அடிக் கமலம் உள்ளிய மெய் அன் புடையார் அருவருத்துத் தள்ளிய செல்வத் தருக்கினுய் என் செய்தாய்’ என்று கூறுதல் காண்க. செல்வத்திற்கு வெறுக்கை என்னும் சொல்லும் உளது. அதற்குக் காரணம் மெய்ஞ்ஞானிகள் அதனே வெறுத்து ஒதுக்குவதனுல் என்க. இந்த அழகிய குறிப்புகளைத்தான் நம் ஐயா இப்பாட்டின் இடைநின்ற இரு அடிகளில் குறித்துள்ளனர். ( ! 73

கலைமக ளோநீன் பணியை அன் போடும் கடைப்பிடித்தாள் அலைமக வோஅன் பெடுேபிடித் தாள் எற் கறைதிகண்ட ய் தலைமக ளேஅருள் தாயேசெல் வாய்க்கரும் தாழ்குழல்பொன் மலேமக ளேஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) எல்லார்க்கும் தலைவியாய் விளங்கு பவளே! அருள்தரும் தாயே! சிவந்த வாயையும், தாழ்ந்த கரிய கூந்தலையுமுடைய அழகிய மலை அரசன் மகளே! திரு ஒற்றியூரில் வாழ்கின்ற இறைவியே! வடிவுடை மர்ணிக்கம்ே:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/70&oldid=681770" இலிருந்து மீள்விக்கப்பட்டது