பக்கம்:திருவருட்பா-11.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 69. விற்றார்தின் தன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்அனிச்சம்’ ஆற்றாதின் சிற்றடிப்போதினத் தூக்கிவைத் தார்.எனின்மால் ஏற்றார் திருவொற்றி ஊரார் களக்கறுப் பேற்றவரே மாற்றா இயல்கொள் மயிலே வடிவுடை மாணிக்கமே.

- (பொ-ரை.) ‘எவராலும் மாற்ற முடியாத இயல்பான நற்கருண்ைப்பண்பு வாய்ந்த மயிலே வடிவுடை மாணிக்கம்ே திருஒற்றியூரில் வாழ்பவரும், கழுத்தில் விடம் உண்ட்தளுல் கருநிற்த்தைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான், பெருமை நிறைந்த உன் திருமணத்தில் சிறிய மிகமெல்லிய அனிச்சமலர் படினும் தாங்க முடியாத அவ்வனவு மென் மைத் தன்மை வாய்ந்த உனது சிறிய மெல்லிய தாமரை மலர் போன்ற திருவடியைத் தூக்கி அம்மி மீது வைத்தார் என்றால், உண்மையில் அவர் உன்னிடம் மிகவும். காதல் மயக்கம் கொண்டுள்ளார் என்பது நன்கு தெரிகிறது. (எ . து:

(அ - சொ) களம் - கழுத்து இயல் - நல் பண்பு. ஆற்ற - பொறுக்க முடியாத போது - மலர்.

(இ - கு.) வீறு + ஆர். சிறுமை + அடி எனப் பிரிக்க

(வி - ரை.) இறைவி அன்பர்கட்குச் செய்யும் அருட் பண்பை எவராலும் மாற்ற முடியாமையின் மாற்றா இயல் கொள் மயிலே’ எனப்பட்டது. களத்திற்குக் கறுப்பு வந்துற்ற மைக்குக் காரணம், இறைவர் விடம் உண்டமையே ஆகும். திருமணத்தில் மணமகள் காலை மணமகன் தூக்கி அம்மீ யின் மீது வைப்பது ஒரு சடங்காகும். அவ்வாறு இறைவர் பாாவதிதேவியின் திருமணத்தில் அம்மையின் திருவடியைத் தூக்கி அம்மியில் வைத்தார் என நம் ஐயா. உலகப் போக்கை எண்ணி இவ்வாறு கூறிஞர். இந்தச் சடங்கு நடந்ததைப் பரஞ்சோதி முனிவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/79&oldid=681779" இலிருந்து மீள்விக்கப்பட்டது