பக்கம்:திருவருட்பா-11.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவருட்டா

  • மங்கலம் பு:னந்த செம்பொன் அம்மியில் மணுட்டி பாதம்

பங்கய மலரைக் கையால் பரிபுரம் சிலம்பப் பற்றிப் புங்கவன் மனுவால் ஏற்றி”

என்று திருமணப் படலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அம்மியின் மீது மணமகளின் காலத் துக்கி வைப்ப தேன் ? இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இக் காரணங்களை இறைவன் இறைவியின் காலத் தூக்கி வைத்ததற்குப் பொருத்திக் காணக் கூடாது உலக மக்களுக் காகவே இவ்விரு காரணங்களைக் கொள்ள வேண்டும். ஒன்று, ‘அகலிகை இந்திரனுடன் கூடித் தன் கற்பை இழந்து கல்லானது போல நீயும் உன் கற்பை இழந்து கல்லாக மாருதே’ என்பது. மற்றாென்று நீ இனி இல்லறம் நடத்தப் போகிறாய். அங்ஙனம் நடத்தும் போது, துறந்தார், துவ்வா தார் முதலியவர்கள். உன்ன அணுகியபோது அவர்கட்கு உண்டி முதலியவற்றைத் தந்து மகிழவேண்டும் அத் தகையவர்கள் வந்தபோது நீ இந்தக் கல்லே ப்போலக் கடின உள்ளம் படைத்தவளாக இருத்தல் கூடாது,’ என்பதாம். முன்னேய காரணத்தினும் பின் ஆனய காரணமே மிக மிகப் பொருத்தமானது. அனிச்சம் பூ மிகமிக மென்மையானது. அதனே மோந்து பார்த்ததுமே அது வாடிவிடும் தன் மையது. இந்த உண்மையினத் திருவள்ளுவர் மோப்பக் குழையும் அனிச்சம் ‘ என்று கூறுதல் காண்க. இவ்வளவு மென்மைக் குரிய அணிச்சம், பூவின்மீது சமுத்திரிகா லட்சணம் அகனத் தும் வாய்க்கப்பெற்ற ஒரு பெண்ணின் பாதம் வைக்கப்படு மானுலும், அப்பாதம் நெருஞ்சி முள் தைத்தால் போன்று துன்புறுமாம். இதனையும் தம் திருக்குறள்.

  • அனிச்சமும் அன்னத்தின் துாவியும் மாதா

அடிக்கு நெருஞ்சிப் பழம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/80&oldid=681781" இலிருந்து மீள்விக்கப்பட்டது