பக்கம்:திருவருட்பா-11.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவருட் பா

(வி - ரை.) மாதர்களின் தளரா கொங்கையின் தோற்றத்திற்கு யானேயின் மத்தகத்தை உவமை கூறுவது புலவர் மரபு. கொங்கைகள் ஆடவரை உருத்துப் பார்ப்பது போல இருத்தலின், யானை மருப்பு உவமை காட்டுவதும் உண்டு. இந்தக் கருத்தில் வேளே வென்ற உழத்தியர் வெம்முலே ஆளே நின்று முனிந்திடும் அங்கொர்பால்” என்று கம்பர் கூறுதலும் காண்க. திருஒற்றியூர் கடற்கரை ஓரத்தில் இருப்பதல்ை, அக் கடல்காற்றைத் துய்த்துக்கொண்டே இருக்க இறைவன் விரும்புதலின், அவ்வொற்றி விருப்புறு ஒற்றி ஆயிற்று. இறைவனுக்குப் பாம்பாபரணம் இருப்பதத் குரிய காரணத்தைக் கூறவந்த புலவர் ஒருவர்,

ஒட்டாக ஒட்டியும் கால்பொன்னின்

மாப்பொன் உபாயமதாத் தெட்டா திரான் பணி செய்யாதிரான்

செம்பொன் மேருவினைக் கட்டாகக் கட்டிக் கடுகள

வாநிறை காட்டவல்ல தட்டா னுக்குப்பயந் தல்லோஅணிந்

தான் சிவன் சர்ப்பத்தையே ‘

என்று வேடிக்கையாகப் பாடினரி. மணிமொழியார் இறைவன் பாம்பை அணிந்திருப்பதற்குக் காரணம் எவ் வுயிர்க்கும் இயல்பாய் இருக்கும் தன்மையில்ை என்பர். யோகிய இறைவனது பாம்பைக் குண்டலி என்பர். அதாவது மூலாதாரத்தில் இருக்கும் பாம்பின் வடிவமைந்த ஒருசத்தி என்பர். இறைவன் ஊழி முடிவில் எல்லா உயிர்களையும் அழித்துத் தானே அழியாத நித்தியன் என்பதை மக்களுக்கு அறிவுறுத்தும் முறையில் இறந்தவர்களின் தலை ஒட்டினத் தான் அணிந்து கொள்வன். தாருகா வனத்து இருடிகள் இறைவனை அழிக்கத் தீ அகல ஏவியபோது அதனை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/82&oldid=681783" இலிருந்து மீள்விக்கப்பட்டது