பக்கம்:திருவருட்பா-11.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கம லே 73

கையில் ஏற்றுக்கொண்டனன். சைவசித்தாந்த சாத்திர மாம் உண்மை விளக்கம், இறைவனது பஞ்சாட்சர மந்திர மாகிய நமசிவாய என்பதில் நெருப்பு நகர எழுத்தின் அறிகுறி என்றும், இறைவனது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில் களில் அங்கி சங்கரத்திற்குரிய கருவியாக உள்ளது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் அழிக்கும் பொருட்டுக் கொண்டது என்றும் கூறும். இதனை முறையே, அங்கி நகரம்’ அங்கியிலே சங்காரம்’ :வல்வினையைச் சுட்டு’ எனும் உண்மை விளக்கத்தில் வரும் தொடர்களால் உணர்க.

இறைவன் திருமேனி நெருப்பு மயமானது. இதனேக் திருநாவுக்கரசர், சீர்ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தில்லைத் திகழ் ஒளியை” என்று கூறுதல் காண்க. ஒரு புலவர், :உலையின் இருப்புவன மேனியன்’ என்று கூறியுள்ளனர்.

இறைவன் எல்லாப் படியாலும் தீ வடிவினனும் உள்ளான் என்பதைக் காளமேகம் வேடிக்கையாக,

தீத்தான் உன் கண்ணிலே தீத்தான் உன் கையிலே தீத்தானும் உன் தன் சிரிப்பிலே-தீத்தான் உன் மெய்எலாம் புள்ளிருக்கும் வேளுரா உன்னை இந்தத் தையலாள் எப்படிச்சேர்ந் தாள்.’

என்று வினவுகின்றார், இந்தக் கருத்தை எல்லாம் உட் கொண்டே நம் ஐயா, வடிவுடை மாணிக்கமே நெஞ்சம் அஞ்சாய்’ என்று அன்புடன் வினவுவாராயினுர்.

இறைவிக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று சயாமளே’ என்பது. பரிமள யாமள பைங்கிளியே’ என்று அபிராமி அந்தாகி கூறித் துதிக்கிறது. யாமளே என்பதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/83&oldid=681784" இலிருந்து மீள்விக்கப்பட்டது