பக்கம்:திருவருட்பா-11.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 77

ஒருரு வாய்ஒற்றி யூர் அமர்ந் தார்தின் உடையவர்பெண் சீருரு வாகும்தின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில் நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலேயே வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.

(பெ. - ரை.) நீண்ட உருவு அமைந்த முலையை உடைய உமாதேவியே வடிவுடை மாணிக்கமே! ஒப்பற்ற ஒரே வடிவாய் இருந்துகொண்டு திருஒற்றியூரில் வீற்றிருக் கின்ற உன்னுடைய நாயகர், பெண்ணுகிய சிறப்புப் பொருந்திய உன் சக களத்தியாகிய கங்கை நங்கையை நீ அறிந்து கொள்ளாதபடி நீர் வடிவாக்கித் தலையில் சுமந்து கொண்டு இருக்கிருரே! அதைப்பற்றி நீ சிறிதும் சிந்திக்காமல் இருக்கின்றாயே. என்ன காரணம்?” (எ . து.)

(அ சோ.) வார் - நீண்ட ஆர் - பொருந்திய, கொங்கை முலை. ஒர் . ஒப்பற்ற,

(இ . கு.) உருவு + ஆர், எனப்பிரிக்க, நங்காய் என்பது விகுதி பெருத பெண்பால் சிறப்புப் பெயர்.

(வி ரை. கொங்கை பருத்திருப்ப தோடின்றி நீண்டு இருக்க வேண்டியது சாமுத்திரிகா லட்சண விதி ஆதலின், வார் உருவு ஆர் கொங்கை எனப்பட்டது. இறைவன் பல வடி வினனுக இருப்பினும் அவனது உண்மை இறைமை வடிவு ஒன்றே ஆதலின் ஓர் உருவாய என்றனர். ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்பது திருமந்திரம். இறைவர் பார்வதி தேவிக்கே உரிமை உடையவரே அன்றிக் கங்கா தேவிக்கும் உரியவர் அல்லர் என்பதை அறிவுறுத்தவே நின் உடை யார் ‘ என்று கூறுகிருச். கங்காதேவியும் பார்வதிதேவி போல அழகுடையவள் என்பதை அறிவிக்கவே அவள் * சீர் உருவாகும் நின் மாற்றாள் ‘ எனப் பட்டாள். இந்தப் பாட்டிலும் முன் பாட்டில் அமைத்த கற்பனேயை மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/87&oldid=681788" இலிருந்து மீள்விக்கப்பட்டது