பக்கம்:திருவருட்பா-11.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 திருவருட்பா

உரிச்சொல் கூர்ந்து என வின எச்சமாகி நிற்கிறது. கொதிப்பள், தன்மை ஒருமை வினே முற்று.

(வி - ரை.) பெண்களின் கண்கள் நீண்டு இருக்க வேண்டியது சாமுத்ரி க லட்சணவிதி. அவ்வாறு நீண் டிருப்பதால் அது பிறழும்போது காது அணிகளேச் சென்று தl க்குவது டோல் காணப்படும். இதனே உட்கொண்டே ஈண்டு வார்ந்தே குழைகொள் விழி ‘ எனப்பட்டது. இதற்குமுன் வந்த இரு செய்யுட்களில் பரமேசுவரன் பார்வதி தேவியார்க்கு அஞ்சிக் கங்கையை முடியில் வைத்தனன் என்னும் குறிப்பில் பாடினர். இச் செய்யுளில் இறைவர், உமையம்மையுடன் கொஞ்சிக் குலாவுவதைக் கங்கை காணின், கங்காதேவி சினம் கொள்வள் என்ற காரணத்தால் அவளைச் சடையில் சிறை செய்துள்ளார் என்று பாடி புள்ளனர்.

அப்பர் பெருமாளுர் இறைவர் இரு மனேவியருடன் இருப்பது குறித்து வேடிக்கை செய்வார் போலப் பாடி இருக்கும் ஒரு பாடலேயும் இங்கு நினவுகூர்தல் நல்லதே.

‘வங்க மலி கடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே

எங்கள் பெருமான் ஒர் விண்ணப்பம் உண்டது கேட்டருளிச்

கங்கை சடையுள் கரந்தாய் அக்கள் ளத்தை மெல்லஉமை

நங்கை அறியில் பொல்லாது கண் டாய் எங்கள் நாயகனே”

என்பது அப்பாட்டு. மேலும் அவர், இவ்விருவர்க்கும் அஞ்சி நடப்பதையும் அழகுற,

மங்கை கானக் கொடார் மன மாலேயைக் கங்கை காணக் கொடார்முடிக் கண் ணியை’

என்று பாடுதலேயும் காண்க. (25)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/90&oldid=681792" இலிருந்து மீள்விக்கப்பட்டது