பக்கம்:திருவருட்பா-11.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருவருட்பா

முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ் ஒப்போ தருமலைப் பெண் அமு தேஎன்று வந்து நீனே எப்போதும் சிந்தித் திடர் நீங்கி வாழஎனக் கருள்வாய் மைப்பே தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) கருங்குவளே மலர் போன்ற கண்களே யுடைய மானே !! வடிவுடை மாணிக்கமே : காலே, பகல், மாலே ஆகிய மூன்று வேளைகளிலும் மெய் அன்பர்கள் வந்து வணங்கி வாழ்த்துகின்ற திருஒற்றியூரில் உள்ள எங்கள் முதல்வராகிய சிவபெருமான் மகிழ்கின்ற ஒப்புக் கூறமுடியாத அரிய மேரு மலையில் தோன்றிய பெண் அமுதே என்று மகிழ்வுடன் உன்னை எப்போதும் நினேந்து துன்பம் நீங்கி வாழ எனக்கு அருள் செய்வாயாக ‘. (எ . து.)

(அ - சொ) மைப்போது - கருங்குவளைமலர், அனேய - போன்ற, முப்போது - மூன்று வேளே, ஒத அரும் சொல்லி முடியாத இடர் - துன்பம். உவந்து - மகிழ்ந்து.

(இ - கு.) மூன்று + போது, ஒத + அரும். என்று + உவந்து எனப்பிரிக்க.

(வி - ரை.) பெண்களின் கண்களுக்குக் கருங்குவளே மலரை உவமை கூறுவது புலவர் மரபு. இறைவன் நம்மை வாழ்த்த வேண்டுமே அன்றி நாம் அவனே வாழ்த்துவது மரபு அன்றே என்று சிலர் கருதலாம். இறைவனே நாம் வாழ்த்துவது அவன் வாழ்வதற்கு அன்று. நாம் வாழ்வதற் காகவே ஆகும். இந்த உண்மையினத் திருவாதவூரர்,

வாழ்த்துவதும். வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்

தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎலாம் தொழவேண்டிச் சூழ்த்துமது கரம்முரலும் தாரோயை நாய் அடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானும் உன்னைப்பாவுவனே’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/92&oldid=681794" இலிருந்து மீள்விக்கப்பட்டது