பக்கம்:திருவருட்பா-11.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடிவுடை மாணிக்கமாலே 85.

(இ . கு.) தேய், முதல் திலேத் தொழிற்பெயர். தேவி, அண்மை விளி. வாய்க்குற்றம், ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை, குற்றம், ஆகுபெயர். சேய்க்குற்றம், ஆறன் தொகை ஏடா, முன்னிலைச் சொல். செப்புவள், திசைச்சொல். வேண்டும், குறிப்பு வினைமுற்று.

(வி - ரை.) தட்சனது சாபத்தின் காரணமாகச் சந்திரன் தன் கலைகள் தேய்ந்து போகும் சாபத்தைப் பெற்றுப் பின் இறைவன அடைக்கலம் புக, இறைவன் அவன் குற்றத்தை மாற்றிஞன். அதுபோல, இறைவியும் அன்பர்களின் வாய்ச் சொல் குற்றத்தையும் மாற்றவல்லவள் என்பது இங்கு அழகு படக் கூறப்பட்டுள்ளது. ஏடா என்பது சிறியவர்களைப் பெரியவர்கள் அழைக்கும் சொல்லாகும். இதுவே, இக் காலத் தில் ஏண்டா’ என்றாயது. இச் சொல் பழி அஞ்சின படலத்தில் என்னே மதித்தே ஏடா வேடா என்று ஆளப் பட்டிருத்தலைக் காண்க. செப்பு என்பது தெலுங்கு சொல். ஆதலின் அது திசைச் சொல் ஆயிற்று பெரியோர்கள் தம் அடக்கம் தோன்றத் தம்மை நாய் என்று கூறிக் கொள்வர். இவ்வாறு சொல்லிக் கொள்வதில் முன் அணியில் நிற்பவர் மணி மொழியார் ஆவார். நாயே அனய நமை நாயி னேன் உனை நினேயவும் மாட்டேன்’ ‘கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனே’ என்று திருவாதவூரர் தம்மைக் கூறிக்கொள்ளுதல் காண்க. அவரை ஒட்டியே நம் வள்ள லாரும், என்று தம்மைக் கூறிக்கொண்டனர்.

தட்சன் தன் பெண்களாகிய அசுவனி முதலிய இருபத் தெழுவரைச் சந்திரனுக்கு மணம் முடித்தான். ஆனுல், அவன் கார்த்திகை, உரோகணி ஆகிய இரு பெண்களிடம் மிகுதியும் காதல் கொண்டிருந்தான். இதனுல் ஏனைய இருபத்தைந்து மாதர்களும் தட்சனிடம் தம் குறைகளேக் கூறிக்கொண்டனர். தட்சன் சந்திரனுடைய கலைகள் தினம் தினம் குறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/95&oldid=681797" இலிருந்து மீள்விக்கப்பட்டது