பக்கம்:திருவருட்பா-11.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருவருட்பா

முடிவில் ஒன்றும் இன்றி இறக்கக் கடவன் என்று சாப மிட்டனன். இச் சாபத்தால் கலைகள் குறைவதைக் கண்ட சந்திரன் இந்திரன், பிரமன், திருமால் ஆகிய மூவரிடமும் சென்று தன்னைக் காக்கவேண்டும் என்று கூற அவர்கள் ‘சிவபெருமான் ஒருவரே உன்னைக் காக்கவல்லவர்’ என்று கூற அவன் சிவபெருமானைச் சரணம் புக்கனன். அவன் சிவனு ரைச் சரண் புகுந்தபோது சந்திரன் ஒரு கலையோடு இருந் தனன். ஆகவே, சிவனுர் ஒரு கலே மட்டும் கொண்டு வருந் திய சந்திரனத் தம் தலையில் சூடி இழந்த கலேகளே வளரச் செய்து திருவருள் புரிந்தார். இதனைக் காந்த புராணம்,

“தீர்ந்தன. அன்றியே திங்கள் தன்னிடை ஆர்த்திடு கலையினை அம்கை யில்கொளா வார் ந்திடு சடை மிசை வயங்கச் சேர்த்தினன் சார்ந்தில தல்வழித் தக்கன் சாபமே என்று அறிவித்தல் காண்க. இந்தக் கருனேத் திறத்தை வியந்தே நம் ஐயா, ‘மதியின் தேய்க்குற்றம் மாற்றும் திருஒற்றிநாதர்’ என்றனர். (2.9)

செங்கம லாசனன் தேவிபொன் நானும் திருமுதலோர் சங்கம தாம்மிடற் ருேங்கும்பொன் நானும் தலகுணித்துத் துங்கமு ருதுளம் நாணத் திருஒற்றித் தோன்றல் புனே மங்கல நாண் உடை யாளே வடிவுடை மாணிக்கமே.

(பொ. - ரை.) சிவந்த தாமரை மலரைத் தனக்கு இருப் பிடமாகக் கொண்ட பிரமனது தேவியாகிய சரசுவதியின் அழகிய தாலி கயிறும், இலக்குமி முதலான தேவிமார்களின் சங்கு போன்ற கழுத்துகளில் சிறந்து விளங்கும் அழகிய தாலி கயிறும் தலையினத் தொங்கப் போட்டுத் தாம் உமாதேவி யின் கழுத்தில் விளங்கும் தாலி கயிறு போல என்றும் இருக் கும் பேற்றைப் பெற்றிலோமே என்று வெட்கப்படும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-11.pdf/96&oldid=681798" இலிருந்து மீள்விக்கப்பட்டது